ஹர்திக் பாண்டியாவுக்கு விழுந்த அடி... ஆப்பு வைச்ச சூர்யகுமார் யாதவ்.. ஏற்பட்டுள்ள சிக்கல்!
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டதுடன், குடல் இரக்கம் காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் இரண்டு லீக் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க உள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் காரணமாக துடுப்பாட்ட வரிசையில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டதுடன், குடல் இரக்கம் காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவர் தயாராகி விடுவார் என கூறப்பட்டபோதும். சூர்யகுமார் யாதவ் போட்டிகளில் பங்கேற்க மேலும் சில நாட்கள் தேவைப்படுகின்றதாம்.
தேசிய கிரிக்கெட் அகாடமி தகவல்களின் அடிப்படையில் சூர்யகுமார் யாதவ் ஏப்ரல் மாத துவக்கத்தில் தான் போட்டிகளில் விளையாட முழு உடற்தகுதி பெற முடியும்.
எனினும், மும்பை இந்தியன்ஸ் அணி 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் ஆட உள்ளது.
எனவே, அந்த இரண்டு போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் பங்கேற்க முடியாத நிலை காணப்படுவதால், இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலத்த அடியாக பார்க்கப்படுகின்றது.
இதனை, கேப்டன் ஹர்திக் பாண்டியா எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.