தோனிக்காக விதியை மாற்றிய பிசிசிஐ? செம ட்விஸ்ட்.. மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்!

2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர் தோனிக்காக முக்கிய விதி ஒன்றை பிசிசிஐ மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தோனிக்காக விதியை மாற்றிய பிசிசிஐ? செம ட்விஸ்ட்.. மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்!

2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர் தோனிக்காக முக்கிய விதி ஒன்றை பிசிசிஐ மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாட வேண்டும் என்பதற்காகவே பிசிசிஐ விதிகளை மாற்ற உள்ளதா என்ற கேள்வி  எழுந்துள்ளது.

2025 ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடக்கவுள்ள மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு ஐபில் அணியும் மூன்று அல்லது நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும்.

இந்த நிலையில், நான்கு வீரர்களை மட்டமே ஒரு ஐபிஎல் அணி தக்க வைக்க முடியும் என்ற விதியில் மாற்றம் செய்ய வேண்டும் என சிஎஸ்கே அணி கோரிக்கை வைத்தது.

சமீபத்தில் நடந்த ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் பிசிசிஐ-இடம் இது குறித்து சிஎஸ்கே அணி பேசியதுடன், குறைந்தது ஐந்து முதல் ஆறு வீரர்களை தக்க வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.

நான்கு வீரர்களை மட்டுமே தக்க வேண்டும் என பிசிசிஐ கூறினால் சிஎஸ்கே அணியால் தோனியை தக்க வைக்க முடியாமல் போகும் என்பதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகின்றது.

ஏனெனில், சென்னை அணியின் முக்கிய வீரர்களாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திரர் ஜடேஜா, சிவம் துபே மற்றும் மதிஷா பதிரானா ஆகியோரை அந்த அணியால் இழக்க முடியாது என்பதால், அவர்களை தக்க வைக்குமாறு தோனி சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கூறி இருக்கிறார். 

அத்துடன், ஐந்து வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ அனுமதி அளித்தால் மட்டுமே என்னை தக்க வையுங்கள் என தோனி கூறி இருக்கிறார். 

இந்த நிலையில், பிசிசிஐ ஆறு வீரர்கள் வரை தக்க வைக்க அனுமதி அளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளதுடன், 2025 ஐபிஎல் தொடரில் தோனி சிஎஸ்கே அணியில் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. 

தோனி ஐபிஎல் தொடரில் விளையாடினால் அவர் எந்த மைதானத்திற்கு சென்றாலும் அங்கு அவரது ரசிகர்கள் திரண்டு வருவதால், அது ஐபிஎல்-க்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைகிறது.

ரோஹித் சர்மா அல்லது விராட் கோலிக்கும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால், தோனி அளவுக்கு இல்லை என்பதே உண்மை. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp