ரோஹித் இல்லாவிட்டால் இவர்தான் கேப்டன்... கம்பீர் அதிரடி... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

கேப்டன் சர்ச்சை குறித்து  ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு கவுதம் கம்பீர் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

ரோஹித் இல்லாவிட்டால் இவர்தான் கேப்டன்... கம்பீர் அதிரடி... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என கூறப்படும் நிலையில் இந்திய அணிக்கு யார் கேப்டன் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

ரோஹித் இல்லையொன்றால் அணியின் தற்காலிக கேப்டனாக துணை கேப்டன் பும்ராவே இருக்க வேண்டும் எனபலரும் தெரிவித்து வரும் நிலையில், தொடர் முழுவதுமே பும்ரா தான் கேப்டனாக இருக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்து உள்ளார். 

அத்துடன், ரோஹித் சர்மா ஒரு வீரராக மட்டுமே பங்கேற்க வேண்டும் என கூறி இருந்ததுடன், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் ரிஷப் பண்ட்டை டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறினார்.

இந்த நிலையில், கேப்டன் சர்ச்சை குறித்து  ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு கவுதம் கம்பீர் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

அணியின் துணை கேப்டன் என்பதால், ரோஹித் இல்லை என்றால் பும்ரா தான் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார். அவர்தான் இந்திய அணியை வழிநடத்துவார் என்றார்.

அத்துடன், ரோஹித் சர்மா முதல் போட்டியில் ஆடுவாரா என்பது தொடர்பில் இதுவரை எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என்றும் தகவல் கிடைத்தால் நிச்சயம் அறிவிப்போம் என்றும் கூறினார்.

மேலும், தொடரின் துவக்கத்தில் தான் அது தெரிய வரும் என்றும் அவர் குறிப்பிட்ட நிலையில், கேப்டன்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளதுடன், முதல் போட்டியில் ரோஹித் சர்மா ஆடுவதற்கான வாய்ப்பும் இருப்பது தெரிகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp