மகளிர் டி20 உலகக்கோப்பை ஆரம்பமாகிறது -  இந்திய அணியின் கனவு பலிக்குமா? 

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடப்பதாக இருந்த நிலையில், அங்கு நடந்த உள்நாட்டு அரசியல் பிரச்சனை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை ஆரம்பமாகிறது -  இந்திய அணியின் கனவு பலிக்குமா? 

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஷார்ஜாவில் தொடங்கவுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை வங்கதேசத்தில் நடப்பதாக இருந்த நிலையில், அங்கு நடந்த உள்நாட்டு அரசியல் பிரச்சனை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இன்று நடக்கவுள்ள முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து ஸ்காட்லாந்து அணி களமிறங்கவுள்ளது. மொத்தமாக 10 அணிகள் இந்த டி20 உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ளன. 

Women's T20 World Cup 2024: Complete Guide – Schedule, Squads, Venues, and Live Streaming

குரூப் ஏ-வில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் உள்ளதுடன்,  குரூப் பி-யில் வங்கதேசம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் காணப்படுகின்றன.

18 நாட்கள் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 23 போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில்,  இறுதிப்போட்டி வரும் 20ஆம் தேதி நடக்கவுள்ளதுடன், இந்திய அணி ஐசிசி கோப்பையை முதல்முறையாக வெற்றிக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றது.

மறுபுறம், தொடர்ந்து 4வது முறையாக டி20 உலகக்கோப்பையை வெல்ல  ஆஸ்திரேலியா அணி தீவிரமாக உள்ளதுடன், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆசிய சாம்பியனான இலங்கை அணிகளும் கடுமையான சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளதால், இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் ஏற்பட்டுள்ளதுடன், முதல்முறையாக ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகையே மகளிர் டி20 உலகக்கோப்பைக்கும் வழங்கப்படவுள்ளது. 

டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.19.64 கோடி அளிக்கப்படவுள்ளதுடன், இது கடந்த டி20 உலகக்கோப்பையை காட்டிலும் சுமார் 134 மடங்கு அதிகமாகும். 

இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து நாளை விளையாடவுள்ளதுடன்,  இந்த மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்படவுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...