4ஆவது டெஸ்டில் வெற்றிப்பெற்றால் WTC இறுதிப்போட்டிக்கு இந்தியாவால் முன்னேற முடியுமா?
நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில், தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதால், பைனலுக்கான ஒரு இடம் கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 474/10 ரன்களை குவித்த நிலையில், அடுத்துக் களமிறங்கிய இந்திய அணி, மூன்றாவது நாள் முடிவில் 358/9 ரன்களை சேர்த்து, 116 ரன்கள் பின்தங்கியது.
அத்துடன், கடைசி இரண்டு நாட்களில் பிட்ச் பௌலர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய அணியால், நான்காவது நாளில் பெரிய ஸ்கோர் அடிப்பது கடினம் எனக் கருதப்படுகிறது.
இதனால், அவர் நிதானமாக பேட்டிங் செய்யும் பட்சத்தில் ஆட்டம் டிரா ஆகும். ஒருவேளை, நாளை ஆஸ்திரேலியாவை இந்தியா 150 ரன்களில் சுருட்டினால், இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பும் இருக்கும்.
நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றால் அல்லது டிரா செய்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு, நேரடியாக முன்னேற முடியாது. தென்னாப்பிரிக்க அணி, பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட்களில் ஒன்றில் வென்றாலே பைனலுக்கு முன்னேறிவிட முடியும்.
தற்போது, நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில், தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதால், பைனலுக்கான ஒரு இடம் கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
நான்காவது டெஸ்டில், இந்தியா டிரா செய்து, கடைசி போட்டியில் வெல்லும் பட்சத்தில், ஆஸ்திரேலிய அணி, அடுத்து இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால் மட்டுமே, ஆஸ்திரேலியாவால் பைனலுக்கு முன்னேற முடியும்.
ஒருவேளை, நான்காவது டெஸ்ட் டிரா ஆகி, 5ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெல்லும் பட்சத்தில், இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட்களில், ஆஸ்திரேலிய அணி, ஒரு வெற்றியைப் பெற்றாலே போதும். இதனால், இந்திய அணியானது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது மற்றும் 5ஆவது டெஸ்டில் கட்டாயம் வென்றாக வேண்டும்.