காயத்தால் அவதிப்படும் இந்திய அணி... கடைசி நேரத்தில் நாடு திரும்பிய வீரர்... புறப்பட்டார் மாற்று வீரர்!

ஷுப்மன் கில் காயம் காரணமாக, முதல் டெஸ்டில் இருந்து விலகியதுடன், ரோஹித் சர்மா முதல் டெஸ்டின்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

காயத்தால் அவதிப்படும் இந்திய அணி... கடைசி நேரத்தில் நாடு திரும்பிய வீரர்... புறப்பட்டார் மாற்று வீரர்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக அவதிப்படுவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஷுப்மன் கில் காயம் காரணமாக, முதல் டெஸ்டில் இருந்து விலகியதுடன், ரோஹித் சர்மா முதல் டெஸ்டின்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

சர்பரஸ் கான், கே.எல்.ராகுல், விராட் கோலி போன்ற வீரர்களுக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் தற்போது முழுமையாக குணமடைந்துவிட்டனர்.

இந்த நிலையில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, காயம் காரணமாக நாடு திரும்பியுள்ளார். பயிற்சியின் போது, கலீல் அகமதுவுக்கு இடது கையில் வலி ஏற்பட்டது. துவக்கத்தில் அது லேசானதாக இருந்ததால், அதனை கண்டுகொள்ளாமல், கலீல் அகமது தொடர்ந்து பயிற்சி மேற்கொண்ட நிலையில், அவது தீவிர வலியாக மாறியது. 

கடைசி நேரத்தில் இந்திய அணியில் ஏற்பட்ட மிகப் பெரிய ட்விஸ்ட்.. இளம் வீரருக்கு அதிஷ்டம் 

இதனைத் தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவர், தற்போது நாடு திரும்பியுள்ளார். மாற்று வீரராக யாஷ் தயாள், ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்ல உள்ளார் என இதுகுறித்துப் பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வீரர்கள் இடத்தில் கலீல் அகமது, நவ்தீப் சைனி, முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்த நிலையில், கலீலுக்கு மாற்றாக, யாஷ் தயாளின் பெயரை பிசிசிஐ சேர்த்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இன்று துவங்க உள்ளதுடன், இரண்டாவது போட்டி, டிசம்பர் 6ஆம் தேதி, அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும். 

அடுத்த போட்டி டிசம்பர் 14ஆம் தேதியும், நான்காவது டெஸ்ட், டிசம்பர் 26ஆம் தேதியும் கடைசி டெஸ்ட் போட்டி, ஜனவரி 3ஆம் தேதி துவங்கும் என்பதுடன், ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் வென்றாலே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். 

ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி முடிவுகளுக்காக காத்திருக்காமல், இந்திய அணியால் பைனலுக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp