வெறும் 38 ரன் தான் தேவை... கோலியின் சாதனைக்கு ஆப்பு.. சாதிப்பாரா ஜெய்ஸ்வால் ?
1970களில் சுனில் காவஸ்கர் இரண்டு முறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் தொடரில் 774 மற்றும் 732 ரன்கள் குவித்து உள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் மாபெரும் டெஸ்ட் சாதனை ஒன்றை ஜெய்ஸ்வால் உடைக்க உள்ளார். அதற்கு இன்னும் 38 ரன்கள் தான் தேவை.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் 8 இன்னிங்க்ஸ்களில் 655 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் முதல் இடத்தில் இருக்கிறார்.
இதன் மூலம், ஒரே டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் அவர் பெற்றுள்ளார்.
1970களில் சுனில் காவஸ்கர் இரண்டு முறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் தொடரில் 774 மற்றும் 732 ரன்கள் குவித்து உள்ளார்.
அதன் பின்னர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விராட் கோலி 692 ரன்களும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 655 ரன்களும் குவித்து இருந்தார்.
இந்த நிலையில், 655 ரன்கள் எடுத்துள்ள ஜெய்ஸ்வால், விராட் கோலியின் ஒரு சாதனையை சமன் செய்து உள்ளார். அவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 38 ரன்கள் சேர்த்தால், விராட் கோலியின் 692 ரன்கள் சாதனையையும் தகர்த்து விடுவார்.
இதையும் படிங்க: இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்.. டி20 உலககோப்பை உத்தேச வீரர்கள் பட்டியல் இதோ...
அத்துடன், 46 ரன்கள் சேர்த்தால் சுனில் கவாஸ்கருக்கு அடுத்ததாக ஒரே டெஸ்ட் தொடரில் 700 ரன்களை தாண்டிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனைளை அவர் செய்து விடுவார்.
ஏற்கனவே, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளில் 23 சிக்ஸர்கள் அடித்து ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த உலக சாதனையை முறியடித்து இருக்கிறார்.