எந்த இந்திய வீரராலும் தொட முடியாத ரெக்கார்டை முறியடித்த ஜெய்ஸ்வால்.. செம சாதனை!

ராகுல் டிராவிட், கவாஸ்கர், விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் செய்த டெஸ்ட் சாதனை ஒன்றையும் ஜெய்ஸ்வால் செய்து காட்டியுள்ளார்.

எந்த இந்திய வீரராலும் தொட முடியாத ரெக்கார்டை முறியடித்த ஜெய்ஸ்வால்.. செம சாதனை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் ஒரு சிக்ஸ் அடித்த ஜெய்ஸ்வால், 16 ஆண்டுகளாக முறியடிக்க முடியாத வீரேந்தர் சேவாக்கின் டெஸ்ட் போட்டி சாதனையை உடைத்து எறிந்தார்.

அத்துடன், ராகுல் டிராவிட், கவாஸ்கர், விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் செய்த டெஸ்ட் சாதனை ஒன்றையும் ஜெய்ஸ்வால் செய்து காட்டியுள்ளார்.

நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மட்டுமே அரைசதம் கடந்தார். 

96 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்த ஜெய்ஸ்வால் 9 ஃபோர் மற்றும் 1 சிக்ஸ் அடித்த நிலையில், அது இந்த ஆண்டில் டெஸ்ட் தொடரில் அவரது 23வது சிக்ஸ் ஆக மாறியது.

இதன் மூலம், ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் ஜெய்ஸ்வால். 

2008ஆம் ஆண்டு வீரேந்தர் சேவாக் 22 சிக்ஸர்கள் அடித்த நிலையில், 2022இல் ரிஷப் பண்ட் 21 சிக்ஸர்கள் வரை அடித்து அந்த சாதனையை நெருங்கினாலும் முறியடிக்க முடியவில்லை.

இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாறிய போட்டி... செம அடி வாங்கிய இந்தியா.... காரணம் தெரியுமா?

தற்போது நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 618 ரன்கள் குவித்துள்ள ஜெய்ஸ்வால். இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் தொடரில் 600 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

முன்னதாக விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் 600 ரன்களை தாண்டி இருந்தனர்.

அது மட்டும் இல்லாது, ஒரே டெஸ்ட் தொடரில் 600 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய துவக்க வீரர் என்ற பெருமையையும் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1970களில் சுனில் கவாஸ்கர் இரண்டு முறை 700 ரன்களை கடந்து ரன் குவித்த நிலையில், பின்னர் வந்த எந்த இந்திய வீரரும் டெஸ்ட் தொடர்களில் 700 ரன்களை தாண்டியதில்லை.

774 ரன்கள் கவாஸ்கர் அடித்து இருக்கும் நிலையில், அந்த சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp