ஹர்திக் பாண்டியா செய்த ஏமாற்று வேலை... முன்னாள் வீரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. உண்மை என்ன?

ஹர்திக் பாண்டியா குறித்து முன்னாள் வீரர் பிரவீன் குமார் சில அதிர்ச்சியான கருத்துக்களை கூறி உள்ளார். 

ஹர்திக் பாண்டியா செய்த ஏமாற்று வேலை... முன்னாள் வீரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. உண்மை என்ன?

ஹர்திக் பாண்டியா குறித்து முன்னாள் வீரர் பிரவீன் குமார் சில அதிர்ச்சியான கருத்துக்களை கூறி உள்ளார். 

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக வேறு எந்த வீரரும் இல்லை என்ற நிலையில் எப்போது காயத்தில் சிக்கினாலும் அதில் இருந்து மீண்டு வந்ததும் இந்திய அணியில் இணைந்து விடுவார்.

இவ்வாறான ஒரு நிலையில், கடந்த 6 வருடங்களை எடுத்து பார்த்தால் பல முறை ஐபிஎல் தொடருக்கு சில மாதங்கள் முன்னதாக காயத்தில் சிக்கி இந்திய அணி ஆடும் போட்டிகளில் பங்கேற்பதை ஹர்திக் பாண்டியா தவிர்த்து இருக்கிறார். 

அத்துடன். ஐபிஎல் தொடருக்குள் அவரது காயம் குணமாகி விடும். இந்த ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை கடந்த நான்கு மாதங்களாக ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக விளையாடவில்லை. 

2023 உலகக்கோப்பை தொடரின் இடையே கணுக்காலில் காயம் ஏற்பட்ட நிலையில், தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட உள்ளார்.

அது குறித்து பேசிய பிரவீன் குமார், "ஐபிஎல் தொடருக்கு இரண்டு மாதம் முன்பு காயத்தில் சிக்குவீர்கள். நாட்டுக்காக ஆட மாட்டீர்கள். உள்ளூர் போட்டிகளில் ஆட மாட்டீர்கள். ஐபிஎல் தொடரில் மட்டும் நேரடியாக ஆடுவீர்கள். 

ஒருவர் பணம் சம்பாதிக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், நீங்கள் உங்கள் மாநிலத்துக்காக, நாட்டுக்காக ஆட வேண்டும். ஆனால், இப்போது சிலர் ஐபிஎல்-க்கு மட்டும் முக்கியத்துவம் தருகிறார்கள்." எனக் கூறி அதிர்ச்சி அளித்து உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp