அதை செய்யாவிட்டால் இந்திய அணியில் இருந்து நீக்கம்.. சிக்கலில் இளம் வீரர்
தென்னாப்பிரிக்க டி20 தொடரில் எஞ்சி உள்ள மூன்று போட்டிகளில் அவர் ரன் குவிக்கவில்லை என்றால் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என இந்திய அணி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா அரை சதம் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்
2024 ஐபிஎல் தொடரில் அதிரடியாக ஆடி ரன் குவித்த பின்னர் இந்திய அணியில் இடம் பிடித்த அபிஷேக் சர்மா, இந்திய அணிக்காக 9 போட்டிகளில் ஆடி வெறும் 166 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளார்.
ஒரு போட்டியில் சதம் அடித்த நிலையில், ஏனைய எட்டு போட்டிகளில் வெறும் 66 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஃபார்மில் உள்ளதுடன், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க டி20 தொடரில் எஞ்சி உள்ள மூன்று போட்டிகளில் அவர் ரன் குவிக்கவில்லை என்றால் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என இந்திய அணி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு போட்டியில் மட்டும் அரை சதம் அல்லது சதம் அடித்து விட்டு, அடுத்த இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும் அவரது இடத்துக்கு புதியவர் வர வாய்ப்பு உள்ளது.
சுபமன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய டி20 அணியில் துவக்க வீரர் இடத்துக்கு போட்டி போட்டு வருவதுடன், சஞ்சு சாம்சன் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் சதம் அடித்து துவக்க வீரராக தனது இடத்தை நிலை நிறுத்தி இருக்கிறார்.
அத்துடன், இந்த போட்டியில் ஜெய்ஸ்வாலும் உள்ளதால், இரண்டு துவக்க வீரர்கள் இடத்துக்கு ஐந்து வீரர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
அபிஷேக் சர்மா தனது இடத்தை நிலை நிறுத்திக் கொள்ள, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்த மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து ரன் குவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.