6 பந்தில் 6 சிக்ஸர் விளாசுவேன்... சாதித்து காட்டுவேன்: சபதம் செய்த இந்திய அணி வீரர்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 6 பந்தில் 6 சிக்ஸர்களை அடிப்பேன் என அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 6 பந்தில் 6 சிக்ஸர்களை அடிப்பேன் என அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள அவர், ‘‘2007ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு எதிராக, இதே டர்பன் மைதானத்தில்தான் யுவராஜ் சிங் 6 பந்தில் 6 சிக்ஸரை அடித்தார். யுவராஜ் சிங்கின் சிஷ்யனான நான், யுவராஜ் சிங்கைபோல, 6 பந்தில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைப்பேன்’’ எனக் கூறினார்.
வெறும் 6 சிக்சர் அடித்தால் போதும்... இரண்டு முக்கிய சாதனையை படைக்க சூர்யகுமாருக்கு வாய்ப்பு!
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி, இன்று நடைபெறவுள்ளது. அடுத்து, நவம்பர் 10, 13, 15 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறும். அனைத்து போட்டிகளிலும், இந்திய நேரப்படி இரவு 8:30 மணிக்கு துவங்கும்.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜயகுமார் வைசக், ஆவேஷ் கான், யாஷ் தயாள் ஆகியோர் அடங்கிய உத்தேச இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பஞ்சாப்பை சேர்ந்த அபிஷேக் சர்மா, கொரோனாவின் போது யுவராஜ் சிங்கை சந்தித்து, அதிரடியாக எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து ஆலோசனையை பெற்றார்.
யுவராஜும், அபிஷேக்கும் இணைந்து பயிற்சி மேற்கொண்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலானதுடன், தொடர்ந்து, பஞ்சாப் அணிக்காக உள்ளூர் தொடர்களில் அதிரடியாக விளையாடி, ஐபிஎல் தொடரிலும் இடம்பிடித்தார்.
அங்கு பயிற்சியாளர் பிரையன் லாராவிடம், பயிற்சி பெற்ற அவர், முதல் சில சீசன்களில் சொதப்பிய நிலையில், கடந்த சீசனில் தொடர்ந்து 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் வேட்டையில் ஈடுபட்டு, இந்திய அணியிலும் இடத்தை பிடித்தார்.
ரோகித், கோலி இல்லை... ஒரே இடத்துக்கு போட்டியிடும் 3 வீரர்கள்.. குழப்பத்தில் சூரியகுமார்!
கடந்த ஜூலை மாதம், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய அபிஷேக் சர்மா, அதிரடியாக சதம் விளாசினார். அப்போது, யுவராஜ் சிங் முதல் நபராக, அபிஷேக் சர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தற்போது, அபிஷேக் சர்மா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாட உள்ளதுடன், இதற்கான, இந்திய அணி, சமீபத்தில் தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.