ரஜினியுடன் ஹிட் படங்களை கொடுத்து 31 வயதில் உயிரிழந் இளம் நடிகை!
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் நன்கு அறியப்பட்ட நடிகையாக இவர் இருந்து வந்தார்.

சினிமா துறையில் தனது நடிப்பு தொழில் உச்சத்தில் இருந்த நடிகை திடீரென உலகை விட்டு பிரிந்தார். ரஜினிகாந்த் நடித்த படையப்பா என்ற படத்தில் நடித்து மிகப்பெரும் வரவேற்பு பெற்ற நடிகை சௌந்தர்யா தான் இளம் வயதில் உயிரிழந்தவர்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் நன்கு அறியப்பட்ட நடிகையாக இவர் இருந்து வந்தார்.
ஹிந்தியில் சூரியவம்சம் படத்தின் ரீமேக்கில் அமிதாப்பச்சனுடன் இணைந்த அவர் நடித்திருந்தார். 1999 இல் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்தன. இந்நிலையில் 2004 ஏப்ரல் 17ஆம் தேதி கர்நாடகாவின் பெங்களூர் அருகே உள்ள ஜக்கூர் விமான பாதையில் இருந்து சௌந்தர்யா புறப்பட்டு ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சௌந்தர்யாவுக்கு வயது 31 ஆக இருந்தது.
பாஜகவில் இணைந்திருந்த சௌந்தர்யா தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் ஆந்திரா சென்ற வழியில் அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
திரையுலகில் நீண்ட காலம் அவர் இடம் பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து நிலையில் 31 வயதிலேயே சௌந்தர்யா உலகை விட்டு பிரிந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது