நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் நடிகை ரம்யா பாண்டியன், இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவான ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து ஆண் தேவதை, மம்முட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். 

இவர் இன்ஸ்டாகிராமின் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை ரசிகர்கள் குவித்து வருகின்றது. தற்போது போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் ரம்யா, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். 

இந்நிலையில், கடந்த ஆண்டு ரம்யா பாண்டியன் பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி வந்த யோகா மாஸ்டர் லவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு நல்ல நட்பு ஏற்பட்டு பின்பு, அது காதலாக மாறியது.

இருவருக்கும் அவரவர் குடும்பத்தாரின் ஒப்புதலுடன் வரும் நவம்பர் 8-ம் தேதி உத்தராகண்டில் உள்ள ரிஷிகேஷில் கோயில் ஒன்றில் திருமணம் நடைபெற உள்ளது. நவம்பர் 15-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp