சென்னை அணியின் தோல்வியால் நொறுங்கிய ஸ்ருதிஹாசன்.. சேப்பாக்கத்தில் நடிகை கண்ணீர்!

நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இதுவரை 2 ல் மட்டுமே வென்றுள்ளதுடன், 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால், சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ளது.

Apr 27, 2025 - 09:00
சென்னை அணியின் தோல்வியால் நொறுங்கிய ஸ்ருதிஹாசன்.. சேப்பாக்கத்தில் நடிகை கண்ணீர்!

சென்னை அணியானது ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த நிலையில், இந்த போட்டியை நேரில் காண வந்திருந்த நடிகை ஸ்ருதிஹாசன் அணியின் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்கலங்கிய சம்பவம் வைரலாகி வருகின்றது.

சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத் அணி முதல்முறையாக சிஎஸ்கே அணியை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் புதிய வரலாறு படைத்துள்ளது. 

நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இதுவரை 2 ல் மட்டுமே வென்றுள்ளதுடன், 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால், சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ளது.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி முதல் பாதியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே அணி வெறும் 27 ரன்களை மட்டுமே சேர்த்ததது.

அத்துடன், பந்துவீச்சிலும் சாம் கரண் கொடுத்த ஷாக், ஐதராபாத் அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தியது. இந்த போட்டியை பார்க்க ஏராளமான நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார் குடும்பத்துடன் வந்து போட்டியை கண்டு ரசித்தார். அவருடன் ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோரும் வந்திருந்தனர். 

அத்துடன், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்து போட்டியை பார்த்த நிலையில், அஜித் குமார் மற்றும் சிவகார்த்திகேயன் பாடல்களை ஒலிக்கவிட, சேப்பாக்கம் மைதானமே அதிரத் தொடங்கியது. 

இதுமட்டுமல்லாமல் நடிகர் ஸ்ருதிஹாசனும் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தார்.  நடிகை ஸ்ருதிஹாசன் கடைசி வரை நின்று போட்டியை கண்டு ரசித்தார். 

இறுதியாக சிஎஸ்கே அணி தோல்வியை சந்திக்க, அப்போது அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்கலங்கினார். மைதானத்தில் இருந்து கண்ணீரை துடைத்த ஸ்ருதிஹாசனின் வீடியோ வைரலாகி வருகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!