நடிகை ஊர்வசி மகளை பார்த்து இருக்கீங்களா? ஹீரோயின் போல இருக்காங்களே! 

நடிகை ஊர்வசியின் மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களால் மத்தியில் வைரலாகி வருகிறது. 

நடிகை ஊர்வசி மகளை பார்த்து இருக்கீங்களா? ஹீரோயின் போல இருக்காங்களே! 

நடிகை ஊர்வசியின் மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களால் மத்தியில் வைரலாகி வருகிறது. 

கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஊர்வசி. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திரை பயணத்தை ஆரம்பித்தார்.  

அதன்பின்னர் 1983ம் ஆண்டு இயக்குநர் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான முந்தானை முடுச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். 

அதேபோல் மலையாளத்திலும் எதிர்ப்புகள் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக தன்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினர். 

தனது தனித்துவமான நடிப்பினால் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை ஈர்த்த ஊர்வசி பிற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார். தமிழ், மலையாளம் தவிர்த்து தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து தென்னிந்தியாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக மிகவும் பிரபலமானவர்.

தமிழில் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்ணனி நடிகர்களுடன் நடித்துள்ளார். சினிமாவில் ஜொலித்து கொண்டிருந்தபோதே மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு குஞ்சட்டா என்ற மகள் உள்ளார். 

இருப்பினும் இவர்களின் திருமண வாழ்க்கை சில வருடங்கள் மட்டுமே நீடித்தது. விவகாரத்திற்கு பின் கடந்த 2013 ஆம் ஆண்டு சிவபிரசாத் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 

தனது 49வது வயதில் குழந்தை பெற்றுக்கொண்டார். கணவர், குழந்தைகளுடன் ஹாப்பியாக இருக்கும் ஊர்வசி சினிமாவிலும் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். 

இந்த நிலையில் ஊர்வசியின் மகள் குஞ்சட்டாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. பார்ப்பதற்கு ஹீரோயின் போல் இருக்கும் ஊர்வசியின் மகள் குஞ்சட்டாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.  

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp