Latest news from around the world

தொகுப்பளினி தாபாவுக்கு திடீர் திருமணம்.! புகைப்படம் உள்ளே

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஆதித்யா தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் தொகுப்பாளினி ஷர்மிளா தாபா, இவர் பூர்வீகம் நேபாளம்.

நடிகருடன் நெருக்கம்! கீர்த்தியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

2004 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த இவர் அர்ச்சனா மூலம் ஆதித்யா தொலைக்காட்சியில் ஆடிஷனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இவர் பூர்வீகமே நேபாளமாக இருந்தாலும் தமிழை சரளமாக பேசும் திறமை கொண்டவர் அதனால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்து விட்டார். அஜித்தின் வேதாளம் மற்றும் விஸ்வாசம் திரைப்படத்தில் சினிமாவில் கால் தடம் பதித்தார்.

தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம் – தொடரிலிருந்து வெளியேறுமா?

இந்த நிலையில் இவரை பேட்டி எடுத்த பலர் இவருக்கு எப்பொழுது திருமணம் என கேட்டு வந்த போதும். ஆனால் இவர் மௌனம் காத்து வந்தார். தற்போது தனது திருமண அறிவிப்பை மிகவும் சந்தோஷத்துடன் பகிர்ந்துள்ளார்.

தாபா திருமணம் ஜூன் 6 ஆம் தேதி காலை அமைந்தகரையில் உள்ள ஓர் அம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில், நடை பெற்றுள்ளது.

தாபா திருமணம் செய்துகொண்டுள்ள நபர் ‘ரகு’ இவர் பிருந்தா மாஸ்டர் கலா மாஸ்டர் என பல்வேறு நடன இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இந்த நிலையில் இவர்களின் திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சியை புரசைவாக்கத்தில் அவருடைய ஒரு திருமண மஹாலில் ஏற்பாடு செய்துள்ளார்.

தனது திருமணம் குறித்து பேசியுள்ள தாப்பா, எங்க வீட்ல பர்மிஷன் வாங்கத்தான் இத்தனை வருஷம் காத்திருந்தோம். இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்திருக்கு. பெரியவர்கள், நல்லவர்களின் ஆசீர்வாதம் எப்போதும் எங்களுக்கு வேண்டும். ரசிகர்களுக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.