2 ஓட்டங்களில் ஏமாற்று வேலை.. ஆப்கான் வீரர் வாக்குவாதம்... கொந்தளித்த ரோஹித்!
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா போராடி வெற்றி பெற்றது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா போராடி வெற்றி பெற்றது.
முதல் சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் எடுத்த போது, ஒரு விஷயத்தில் ரோஹித் சர்மா பொங்கி எழுந்து விட்டார்.
இரண்டு அணிகளும் முதலில் ஆடிய 20 ஓவர்களில் 212 ரன்கள் எடுக்கவே போட்டி சமன் ஆக, அடுத்து விதிப்படி வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் நடந்தது.
இந்திய அணி சார்பில் முகேஷ் குமார் பந்து வீச, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணி முதல் ஐந்து பந்துகளில் 13 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரர் முகமது நபி பந்தை தவறவிட்ட போதும் ஒரு ரன் ஓட முயற்சி செய்தார்.
அப்போது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பந்தை பவுலரை நோக்கி வீசினார். அப்போது பந்து முகமது நபியின் ஷூவில் பட்டு வேறு திசையில் ஓடியது.
அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் அணி மேலும் 2 ரன்கள் ஓடியது. ஆனால், பந்து ஷூவில் பட்டு அதனால் ஓவர்த்ரோ ஆன நிலையில், பேட்ஸ்மேன் ஃபீல்டிங்கை தடுத்ததாக கூறப்படுகின்றது.
அதே சமயம், பேட்ஸ்மேன் நேராக ரன் ஓடும் போது பந்து அவரை அறியாமல் அவர் மீது பட்டால் அது வேண்டுமென்றே ஃபீல்டிங்கை தடுத்ததாக ஆகாது.
இந்த நிலையில், முகமது நபி கூடுதலாக 2 ரன்கள் ஓடியதை பார்த்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கோபத்தில் பொங்கினார்.
விராட் கோலி பந்தை ஃபீல்டிங் கூட செய்யாமல் காலால் தடுத்து இந்த ரன்கள் செல்லாது என தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். ரோஹித் சர்மா ஒரு படி மேலே போய் முகமது நபியிடம் தன் கோபத்தை காட்டினார்.
ஆனால், முகமது நபி தான் பந்தை வேண்டுமென்றே தடுக்கவில்லை. நேராகத் தான் ஓடினேன் என வாக்குவாதம் செய்தார். அம்பயர்கள் அந்த கூடுதல் ரன்களை ஏற்றுக் கொண்டதால் இந்திய அணியால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
முதல் சூப்பர் ஓவரில் இரண்டு அணிகளும் 16 ரன்கள் எடுக்கவே, போட்டி மீண்டும் இரண்டாவது சூப்பர் ஓவருக்கு சென்றது.
அதில் இந்தியா 11 ரன்கள் எடுத்து, ஆப்கானிஸ்தான் அணியை 1 ரன்னில் 2 விக்கெட் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஒருவேளை அந்த 2 ரன்களை ஆப்கானிஸ்தான் அணிக்கு கிடைக்காமல் இருந்தால் இந்தியா முதல் சூப்பர் ஓவரிலேயே வெற்றி பெற்று இருக்கும் என்று கூறப்படுகின்றது.