பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியளிக்க தயார் பாஸ்.. முன்னாள் இந்திய வீரர் அறிவிப்பு!
1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் வாக்கர் யூனுஸ்-க்கு எதிராக கடைசி 2 ஓவர்களில் 40 ரன்களை விளாசியவர்.
ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட முக்கிய காரணமாக அமைந்தார்.
1992 முதல் 2000 ஆண்டு வரை இந்திய அணிக்காக 196 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5359 ரன்களை விளாசிய அஜய் ஜடேஜா, 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் வாக்கர் யூனுஸ்-க்கு எதிராக கடைசி 2 ஓவர்களில் 40 ரன்களை விளாசியவர்.
சூதாட்ட புகாரில் சிக்கி கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தாலும், ஐபிஎல் தொடரில் 2015ஆம் ஆண்டு டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்தஅஜய் ஜடேஜா, ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட ஆடுகளங்கள் குறித்து முழுமையான அறிவை பெற்றவர்.
இந்த நிலையில் உலகக்கோப்பை குறித்து அஜய் ஜடேஜா பேசுகையில், எங்கள் காலத்தில் பாகிஸ்தான் அணி எப்படி இருந்ததோ, அப்படிதான் இப்போது ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் இருக்கிறார்கள்.
அப்போதைய பாகிஸ்தான் அணியில் ஒவ்வொரு வீரரும் மற்றவர்களின் தவறை முகத்திற்கு நேராக கூறும் பழக்கத்தை கொண்டவர்கள். ஒருவேளை பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் ஒப்புக் கொள்வேன் என்று தெரிவித்தார்.