என்னது அஜித், ஷாலினி விவாகரத்தா.? அதிர்ச்சியை கிளப்பிய ட்வீட்
கடந்த வருடம் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து பற்றிய அறிவிப்பு வெளிவந்து பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது.
கடந்த வருடம் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து பற்றிய அறிவிப்பு வெளிவந்து பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து இந்த வருட ஆரம்பத்தில் விஜய் தன் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப் போகிறார், இருவருக்கும் கருத்து வேறுபாடு என செய்திகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை உருவாக்கியது.
அது மட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ் தான் இதற்கு காரணம் என்று கூட தகவல்கள் காத்து வாக்கில் வெளியாகி உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கேற்றார் போல் விஜய் பல விழாக்களில் தனியாக கலந்து கொண்டதும் மீடியாவுக்கு சரியான தீனியாக அமைந்தது. இந்த பரபரப்பு தற்போது ஓய்ந்திருக்கும் நிலையில் அடுத்ததாக அஜித், ஷாலினி விவாகரத்து என செய்தி கிளம்பியுள்ளது.
இதற்கு காரணம் துணிவு படத்தில் நடித்த மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சுவாரியர் தான் எனவும் ஒரு புரளி கிளம்பியுள்ளது. இப்படி ஒரு ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் பலரும் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.
ஏனென்றால் அவர் தன் காதல் மனைவியை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது ஊர் உலகத்திற்கே தெரியும்.
இத்தனை வருட திருமண வாழ்க்கையில் இவர்கள் தங்களின் காதல் குறையாமல் தான் இருந்து வருகின்றனர். இதற்கு சாட்சியாக பல போட்டோக்கள் மீடியாவில் பட்டையை கிளப்பியது.
அப்படி இருக்கும்போது தேவையில்லாத சில விஷமிகள் இதுபோன்ற செய்தியை பற்ற வைத்து குளிர் காய்கின்றனர்.
அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள இந்த செய்தி நிச்சயம் உண்மை கிடையாது, அவர் மீது இருக்கும் வன்மம் தான் என அஜித் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இதே போல் தான் விஜய் வீட்டு பஞ்சாயத்து பூகம்பமாக வெடித்தது. ஒரு நடிகரின் படங்களை விமர்சிப்பதை தாண்டி இவ்வாறு குடும்ப விஷயத்திலும் வதந்தியை பரப்புவது நிச்சயம் கண்டிக்கத்தக்கதாகும்.
உண்மை என்ன என்று தெரியாமல் வேண்டுமென்றே இது போன்ற தகவல்களை பரப்புபவர்கள் மீது ரசிகர்கள் தற்போது கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆக மொத்தம் இது போன்ற வதந்திகள் அண்மை காலமாக அதிகமாக பரவி வரும் நிலையில் நடிகர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.