குட் பேட் அக்லி வசூல் விவரம் - 200 கோடியை தாண்டி எகிரும் வசூல்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். 

அத்துடன், பிரசன்னா, யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில் ,ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்திருந்தனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 

பத்தாம் தேதி வெளியாகி முதல் நான்கு நாட்களில் 148 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் குட் பேட் அக்லி படத்தின் வசூல் நிலவரத்தை அறிவித்துள்ளது.

உலக அளவில் இந்த படம் தற்போது வரை 200 கோடி வசூல் செய்திருப்பதாகவும் அஜித் கெரியரிலேயே அதிகமான வசூலை பெற்ற திரைப்படமாக இது பார்க்கப்படுகிறது. 

படத்தில் கதை என்பதையும் தாண்டி சீனுக்கு சீன் விறுவிறுப்பான ஒரு ஸ்கிரீன் ப்ளேவை ஆதிக் வைத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் சீட்டின் நுனியில் உட்கார வைத்துள்ளார்.

சனி ஞாயிறு ஆகிய நாட்கள் விடுமுறை தினம் என்பதால் திங்கள்கிழமை வசூல் இன்னும் எகிரும் என்று கூறப்படுகின்றது.