மழை இல்லாமலே ஆட்டம் ரத்து... அம்பயர்களின் முடிவால் இந்திய அணிக்கு பாதிப்பு.. வெளியான உண்மை!

மூன்றாவது நாளில் மழை இல்லாமல் இருந்தாலும், அம்பயர்கள் போட்டியை தாமதமாகத் தொடங்கி, பின்னர் முழுமையாக ரத்து செய்தது சர்ச்சையை தூண்டியுள்ளது.

மழை இல்லாமலே ஆட்டம் ரத்து... அம்பயர்களின் முடிவால் இந்திய அணிக்கு பாதிப்பு.. வெளியான உண்மை!

கான்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மழை இல்லாமல் மூன்றாவது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி, அம்பயர்கள் வேண்டுமென்றே இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த முடிவை எடுத்தார்களா என கேள்விகள் எழுந்துள்ளன.

முதல் இரண்டு நாட்களும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது நாளில் மழை இல்லாமல் இருந்தாலும், அம்பயர்கள் போட்டியை தாமதமாகத் தொடங்கி, பின்னர் முழுமையாக ரத்து செய்தது சர்ச்சையை தூண்டியுள்ளது. மைதானத்தின் ஊழியர்கள் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளனர்.

மைதான ஊழியர்களின் குற்றச்சாட்டு

கான்பூர் மைதானத்தில் பணியாற்றிய ஊழியர் வெளியிட்ட தகவலின்படி, “மூன்றாவது நாள் அன்று அம்பயர்கள் மூன்று முறை மைதானத்தை பரிசோதித்தனர். சில பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதாக கூறினார்கள். ஆனால் எதை சரி செய்ய வேண்டும் என எங்களிடம் கடைசி வரை விளக்கவே இல்லை. நாங்கள் மைதானத்தை ஆட்டத்திற்கு தயாராக வைத்திருந்தோம். ஏனெனில் மழை நீர் மிகச் சில இடங்களில் மட்டும் தேங்கி இருந்தது, அதை விரைவாக அகற்றியிருந்தோம். ஆனால், அம்பயர்கள் முடிவெடுத்து ஆட்டத்தை கைவிட்டனர்,” என்று அவர் கூறினார்.

ரசிகர்களின் அதிர்ச்சி

மழையில்லாமல் மூன்றாவது நாள் முழுவதும் ஆட்டம் நடக்காததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். "நிச்சயம் அரை நாள் ஆட்டம் நடக்கும்" என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்கள், அம்பயர்கள் மதியம் 2 மணிக்கு ஆட்டத்தை கைவிட்டனர் என்ற தகவலை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

அம்பயர்களின் முடிவால் இந்திய அணிக்கு பாதிப்பு

இப்போது போட்டியில் மீதமுள்ள இரு நாட்களே போட்டியை முடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த நேரத்தில் போட்டி டிராவாகி விட்டால், இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இந்நிலையில், அம்பயர்கள் போட்டியை விரைவாக தொடங்காமல் மூன்றாவது நாள் முழுவதும் கைவிட்டதற்கான சர்ச்சை தொடர்கிறது.

நோய்டா போன்றதல்ல கான்பூர் மைதானம்

முன்னதாக நொய்டாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி மழையே பெய்யாத போதும் ஐந்து நாட்களும் நடைபெறவில்லை.

 அந்த மைதானத்தின் மழைநீர் வடிகால் வசதி மோசமாக இருந்தது. ஆனால், கான்பூர் மைதானத்தில் அதுபோன்று சிக்கல் எதுவும் இல்லை. மைதானம் முழுமையாக பிளாஸ்டிக் உறைகளால் மூடப்பட்டு இருந்தது. அதை தாண்டி ஆடுகளத்தின் சில பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்தது. அந்தப் பகுதிகளையும் ஊழியர்கள் சரி செய்து விட்டனர். ஆனாலும், அம்பயர்கள் போட்டியை துவங்கவில்லை.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp