விராட் கோலியால் உலககோப்பை வாய்ப்பை பறிகொடுக்கும் இளம் வீரர்? ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 போட்டிகளில் வயதான வீரர்கள் விளையாட கூடாது என விராட் கோலி கொண்டு வந்த விதியின் காரணமாக பல மூத்த வீரர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை என அமித் மிஸ்ரா கூறி இருக்கிறார். 

விராட் கோலியால் உலககோப்பை வாய்ப்பை பறிகொடுக்கும் இளம் வீரர்? ரசிகர்கள் அதிர்ச்சி!

2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் வென்ற இந்திய அணி அடுத்த டி20 உலக கோப்பையை தங்களது சொந்த மண்ணில் விளையாடுகிறது.

இதுவரை எந்த ஒரு அணியும் தொடர்ந்து இரண்டு முறை உலக கோப்பையை வென்றதில்லை என்ற நிலையில், இதன் மூலம் டி20 வரலாற்றில் புதிய சாதனையை படைக்க இந்தியாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 

விராட் கோலி, ரோகித் சர்மா ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள் அணியில் இல்லாத நிலையில் அவர்களுக்கான மாற்று வீரர்களை கண்டுபிடித்து ஒரு அணியாக உருவாக்க பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற்ற சஞ்சு சாம்சனுக்கு களத்தில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

சஞ்சு சாம்சன் தற்போது 29 வயது ஆகும் நிலையில், அடுத்த டி20 உலக கோப்பை வருவதற்குள் அவருக்கு 31 அல்லது 32 ஆகிவிடும். 

இதனால் அவர் அடுத்த டி20 உலக கோப்பையில் விளையாடுவாரா இல்லை ரிஷப் பந்த் அல்லது இஷான் கிஷன் போன்ற வீரர்களுக்குத்தான் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

டி20 போட்டிகளில் வயதான வீரர்கள் விளையாட கூடாது என விராட் கோலி கொண்டு வந்த விதியின் காரணமாக பல மூத்த வீரர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை என அமித் மிஸ்ரா கூறி இருக்கிறார். 

அத்துடன், இந்த ரூல் காரணமாக அடுத்த டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இடம் பெறாமல் போகலாம் என்றும் கூறியிருக்கிறார்.

டி20 உலக கோப்பை இளம் வீரர்களுக்கானது என்ற மனநிலை உருவாக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ள அமித் மிஸ்ரா, ஆனால் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் சேவாக், யுவராஜ், தோனி, ஹர்பஜன் தான் கோப்பையை வென்று கொடுத்தார்கள் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் கூட விராட் கோலி, ரோஹித், பும்ரா ஹர்திக் பாண்டியா தான் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்ததாகவும் அமித் மிஸ்ரா சுட்டிக்காட்டி உள்ளார். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp