சிங்கத்தை அழைத்து வந்த இலங்கை.. அரண்டுபோன இங்கிலாந்து அணி.. என்ன நடந்தது?

நீண்ட காலமாக அணியில் இடம் பெறாத ஆஞ்சலோ மத்யூஸ்-ஐ இந்தப் போட்டியில் களமிறக்கியது.

சிங்கத்தை அழைத்து வந்த இலங்கை.. அரண்டுபோன இங்கிலாந்து அணி.. என்ன நடந்தது?

2023 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக இலங்கை அணி அதிரடி மாற்றம் ஒன்றை செய்தது.

நீண்ட காலமாக அணியில் இடம் பெறாத ஆஞ்சலோ மத்யூஸ்-ஐ இந்தப் போட்டியில் களமிறக்கியது. 2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை இலங்கை வீழ்த்த காரணமாக இருந்தவர் மத்யூஸ்.

அவரை திடீரென மாற்று வீரராக உலகக்கோப்பை அணியில் சேர்த்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கியது இலங்கை அணி. அவர் 2020க்கு பின் நான்கு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார்.

நல்ல பேட்டிங் திறன் கொண்ட இலங்கை வீரர் என்றாலும் பார்ம் அவுட் ஆக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில், இங்கிலாந்து ஐகி எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தன் பந்துவீச்சு திறமையையும் காட்ட முடிவு செய்தார்.

மறுபுறம் இங்கிலாந்து அணி இந்த உலகக்கோப்பை தொடரில் தான் ஆடிய நான்கு போட்டிகளில் வெற்றி மட்டுமே பெற்று மோசமான நிலையில் இருந்தது. 

இலங்கை அணியும் அதே போல நான்கில் ஒரு வெற்றியை மட்டும் பெற்று இருந்ததோடு, மிக மோசமான அணியை வைத்திருந்தது. அதனால், இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டு இருந்தது.

ஆனால், ஆஞ்சலோ மாத்யூஸ் இங்கிலாந்து அணியின் ஆபத்தான துவக்க வீரர் டாவிட் மலன் விக்கெட்டை வீழ்த்தி அந்த அணியின் சரிவை துவக்கி வைத்தார். 

மலன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோ ரூட் 3, பேர்ஸ்டோ 30, பட்லர் 8, லிவிங்க்ஸ்டன் 1 ரன்னில் ஆட்டமிழந்து வரிசையாக வெளியேறினர்.

அடுத்து பென் ஸ்டோக்ஸ் - மொயீன் அலி ஜோடி சேர்ந்தது. 85 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற இடத்தில் இருந்து 122 ரன்கள் வரை கொண்டு சென்றது இந்த ஜோடி. இன்னும் விட்டால் போட்டியை மாற்றும் வல்லமை கொண்ட வீரர்கள் என்பதால் இலங்கை பதற்றத்தில் இருந்தது. 

அப்போது மீண்டும் கை கொடுத்தார் மாத்யூஸ். மொயீன் அலியை 15 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து கிறிஸ் வோக்ஸ் 0, அதில் ரஷித் 2, பென் ஸ்டோக்ஸ் 43, மார்க் வுட் 5 ரன்களில் ஆட்டமிழந்து வரிசையாக சென்றனர். 

இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மத்யூஸ் 5 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். கசுன் ரஜித 2, தீக்ஷன 1, லஹிரு குமாரா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp