பாகிஸ்தான் வீரர்கள் எடுத்த சபதம்... நோ உருது மொழி... ஆஸ்திரேலியாவை வீழ்த்த மாஸ்டர் பிளான்

ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

பாகிஸ்தான் வீரர்கள் எடுத்த சபதம்... நோ உருது மொழி... ஆஸ்திரேலியாவை வீழ்த்த மாஸ்டர் பிளான்

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த உருது மொழியில் பேசக் கூடாது என பாகிஸ்தான் வீரர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கு பதில் வேறு மொழியில் அவர்கள் பேச உள்ளதாகவும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 1995ஆம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

பாகிஸ்தான் வந்து ஆஸ்திரேலிய அணி ஆடிய டெஸ்ட் தொடரிலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருந்தது.  இந்த நிலையில், அந்த தோல்விக்கு காரணமே ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தான் என்று பாகிஸ்தான் வீரர்கள் முடிவுக்கு வந்து உள்ளனர்.
 
ஆஸ்திரேலிய வீரரான உஸ்மான் கவாஜா, பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர். என்றாலும், ஆஸ்திரேலியாவிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவருக்கு உருது மொழி தெரியாது என பாகிஸ்தான் வீரர்கள்  நினைத்து போட்டியின் இடையே தங்கள் திட்டங்களை உருது மொழியில் பேசி இருக்கின்றனர்.

இதானால், அந்த திட்டங்களை உஸ்மான் கவாஜா மற்ற ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு கூறியதால் தான் அந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததாக பாகிஸ்தான் வீரர்கள் நினைத்துள்ளனர்.

இதனால், தற்போது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேறு திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இந்த முறை உஸ்மான் கவாஜாவை சமாளிக்க வேறு திட்டத்தை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி, கூறி இருந்தார். 

அந்த திட்டம் என்ன என்பது தற்போது பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோ மூலம் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டில் உருது மொழியுடன், பஞ்சாபி மொழியும் பரவலாக பேசப்படும்.

இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சியின் போது பஞ்சாபி மொழியில் பேசிய வீடியோ வெளியாகி இருக்கிறது. உருது மொழியில் பேசும் பாகிஸ்தான் வீரர்கள் பஞ்சாபி மொழியில் பேசி வருவதை வைத்து, உஸ்மான் கவாஜாவை சமாளிக்கவே பாகிஸ்தான் அணி இந்த முடிவை எடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp