பிக்பாஸ் டைட்டில் வென்ற அர்ச்சனா! 2ஆவது, 3ஆவது இடங்களில் யார் தெரியுமா?

தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளராகி இருக்கிறார் அர்ச்சனா.

பிக்பாஸ் டைட்டில் வென்ற அர்ச்சனா! 2ஆவது, 3ஆவது இடங்களில் யார் தெரியுமா?

பிக்பாஸ் டைட்டில் வென்ற அர்ச்சனா

விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கியது. 

கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, பவா செல்லத்துரை, மாயா, ரவீனா உட்பட 18 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கினார்கள். ஒரு மாதம் கழித்து அர்ச்சனா, தினேஷ், அன்ன பாரதி, கானா பாலா, பிராவோ ஆகிய 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியில் உள்ளே நுழைந்தனர்.

விறுவிறுப்பாக நடந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் எவிக்ஷன் நிகழ்ந்து போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 

மொத்தம் 100 நாள்கள் கடந்தவுடன் கடந்த வாரம் அதாவது நிகழ்ச்சியின் கடைசி வாரம் விஜய் வர்மா, தினேஷ், விஷ்ணு, மாயா, மணி, அர்ச்சனா என ஆறு பேர் இறுதிச்சுற்றில் இருந்தனர். 

ஆனால் கடைசி நிமிடத்தில் மிட் வீக் எவிக்ஷன் மூலம் விஜய் வர்மாவும் வெளியேற, ஐந்து பேர் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகினர். இந்த நிலையில் இன்று காலை பிக் பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் தொடங்கியது. 

கமல்ஹாசன் கலந்துகொண்ட ஷூட்டிங், தற்போது வரை போய்க் கொண்டு இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா.

இரண்டாவது இடம் மணி சந்திராவுக்கும் மூன்றாவது இடம் மாயாவுக்கும் கிடைத்துள்ளது. முன்னதாக தினேஷ், விஷ்ணு ஆகிய இருவரும் வாக்குகள் அடிப்படையில் எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளராகி இருக்கிறார் அர்ச்சனா. 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp