தப்பிச்சென்ற அஸ்வின்.. சிக்கிய ரோஹித், கோலி.. இதுதான் காரணமா?

இந்திய அணியில் சரியான இடம் இல்லை என்பதை உணர்ந்து அஸ்வின் ஓய்வை அறிவித்து விலகிவிட்டார் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தப்பிச்சென்ற அஸ்வின்.. சிக்கிய ரோஹித், கோலி.. இதுதான் காரணமா?

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரானது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோரின் புகழை மழுங்கடித்துள்ளதுடன், அவர்கள் மீதான விமர்சனத்துக்கு வித்திட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த அவமானங்களில் இருந்து தப்பும் வகையில் மற்றொரு மூத்த வீரரான அஸ்வின் முன்னதாகவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக,  விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்திய அணியில் சரியான இடம் இல்லை என்பதை உணர்ந்து அஸ்வின் ஓய்வை அறிவித்து விலகிவிட்டார் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதேநேரம், டெஸ்ட் போட்டிகளில் மோசமாக விளையாடி வரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அணியில் நீடித்து தங்கள் நிலைமையை சிக்கலானதாக மாற்றிக் கொண்டு உள்ளனர்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வினை உத்தேச அணியில் தேர்வு செய்த இந்திய அணி நிர்வாகம் முதல் போட்டியில் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கவில்லை.

அதன் பின்னர், அஸ்வின் ஓய்வை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தவுடன் உடனடியாக அவருக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. 

பின்னர் மூன்றாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அவர்  சர்வதேச போட்டிகளில் இருந்து விலகும் முடிவை எடுத்தார்.

அஸ்வினை எப்படியும் ஒதுக்கி வைப்பது என்ற முடிவில் தான் இந்திய அணி இருந்துள்ளது என்றும், அதனால்தான் அதை தடுத்து நிறுத்தவில்லை என்றும் கூறப்படுகின்றது.

ஆனால், ரோகித் மற்றும் கோலி மிக மோசமான ஃபார்மில் இருந்தும்  தாங்களாகவே அணியில் இருந்து விலகி செல்வதாக அறிவிக்காமல் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வருகின்றமை விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp