அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிள் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிள் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, முதல் கட்டம் பற்றிய விரிவான மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளதாக கூறிய அவர், முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அக்டோபர் மாத கொடுப்பனவாக 14 இலட்சத்து 06 ஆயிரத்து 930 பயனாளிகளுக்கான பணம் தற்போது வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பயனாளிகளின் எண்ணிக்கையை 20 இலட்சமாக உயர்த்தி பொருத்தமானவர்களை தெரிவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதுடன், அதற்காக 2024ஆம் ஆண்டிற்கு 205 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.