அஜித்துக்காக கதையோடு காத்திருக்கும் அட்லீ! இது எப்போ?
கார் ரேஸில் பிஸியாக இருப்பதினால் அக்டோபர் மாதத்திற்கு பிறகு தான் அவரின் அடுத்த இயக்குனர் யார் என்பது தெரியவரும்.

அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் இதுவரை 175 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இரண்டாவது வாரத்தின் முடிவில்தான் மொத்த வசூல் எவ்வளவு என சொல்ல முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், படம் 250 லிருந்து 300 கோடி வரை வசூலிக்கும் என தெரிவிக்கப்படுவதுடன், அஜித் கேரியரிலேயே இந்தப் படம் தான் அதிக வசூல் செய்த படமாக மாறும் என்றும் கூறப்படுகின்றது.
அஜித் முதன் முறையாக ரசிகர்களுக்கான ஒரு படம் என்ற வகையில் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அடுத்ததாக அஜித் யாருடன் இணையப் போகிறார் என்ற ஒரு பேச்சும் அடிபட்டு வருகிறது.
அவர் கார் ரேஸில் பிஸியாக இருப்பதினால் அக்டோபர் மாதத்திற்கு பிறகு தான் அவரின் அடுத்த இயக்குனர் யார் என்பது தெரியவரும்.
அதுவரை அவருடைய லிஸ்டில் விஷ்ணுவர்தன், தனுஷ், ஆதிக் ரவிச்சந்திரன், தெலுங்கு இயக்குனர் என வரிசையாக இருக்கின்றனர். இதில் இயக்குனர் அட்லியும் உள்ளாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏனெனில், அஜித்தை பற்றி அட்லி கூறிய ஒரு தகவல் தற்போது வெளியாகி வருகிறது. ஆரம்பம் திரைப்படத்தின் போது ராஜா ராணி படத்திற்காக நயன்தாராவுடன் அவ்வப்போது டிஸ்கசனுக்கு செல்வாராம் அட்லி.
அப்போது அஜித்திடம் நயன்தாரா அட்லியை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். பார்த்தவுடனேயே ‘இப்பதான் ஸ்கூல் முடித்துவிட்டு வருகிறாயா’ என கிண்டலாக கேட்டாராம் அஜித். இருந்தாலும் நல்லா பண்ணுங்க என சொன்னாராம் .
அஜித்துக்காக ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி அவரை தொடர்பு கொள்ள பலமுறை சுரேஷ் சந்திரா மூலம் முயற்சி செய்தேன். ஆனால் சில பல காரணங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
ஆனால் நானும் அஜித்தும் இணைந்தால் அது ஒரு பெரிய வெடியாக இருக்கும். அவர் மட்டும் சரி என்று சொன்னால் ஸ்கிரிப்ட்டோடு போய் நின்று விடுவேன் என அட்லி கூறி இருக்கிறார்.