பாகிஸ்தான் தோல்விக்கு நடுவர்களா காரணம்?... பாபர் அசாமுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி கடைசி வரை போராடி தோல்வியடைந்தது. 

பாகிஸ்தான் தோல்விக்கு நடுவர்களா காரணம்?... பாபர் அசாமுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி கடைசி வரை போராடி தோல்வியடைந்தது. 

இதன் மூலமாக உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றிலேயே பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்து புதிய சாதனைக்கு சொந்தமாகிள்ளது.

இந்தப் போட்டியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. 

இதன் பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் ஷன்சி எல்பிடபிள்யூ ஆனார்.

அப்போது கள நடுவரிடம் பாகிஸ்தான் வீரர்கள் அப்பீல் செய்த நிலையில், அவர் அவுட் கொடுக்கவில்லை. இதன் பின் கேப்டன் பாபர் அசாம் மூன்றாவது நடுவரின் அப்பீலுக்கு சென்றார். 

அதில் நடுவரின் முடிவே இறுதியானது என்ற வகையில் நாட் அவுட் வழங்கப்பட்டது. மூன்றாவது நடுவரின் இந்த முடிவு ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், நடுவர்களின் தவறான முடிவுகள் மற்றும் விதிமுறை காரணமாகவே பாகிஸ்தான் அணி போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 

எல்பிடபிள்யூ விதிமுறை பொறுத்தவரை பந்து ஸ்டம்பை அடித்தால் அவுட், அடிக்கவில்லை என்றால் நாட் அவுட். இதில் நடுவர் என்ன முடிவு அளித்தால் என்ன? தொழில்நுட்பத்தை இப்படி பயன்படுத்துவதால் என்ன பயன். இந்த விதிமுறையை ஐசிசி மாற்ற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

அம்பயர்ஸ் கால் விதிமுறையை பொறுத்தவரை பந்தின் 50 சதவிகித பகுதி ஸ்டம்ப் பகுதியில் பட்டு சென்றால் அவுட் கொடுக்கப்படும். ஒருவேளை பந்தின் 50 சதவிகித பகுதி ஸ்டம்புக்கு வெளியில் இருந்தால், கள நடுவரின் முடிவுக்கு சாதகமாக முடிவு எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp