ஆப்கான் வீரர்களை மோசடி செய்ய முயற்சித்த ஆஸ்திரேலிய வீரர்கள்.. கண்டுபிடித்த நடுவர்!
ஐசிசி ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் மோதிய ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஐசிசி ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் மோதிய ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 21 ரன்கள், ரஹ்மத் ஷா 30 ரன்கள், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி 26 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
எனினும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய இப்ராஹிம் சார்ட்ரன் 143 பந்துகளில் 129 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.
இறுதியில் ரஷித் கான் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ரஷித் கான் 18 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 35 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று சிக்ஸர்களும் இரண்டு பௌண்டரிகளும் அடங்கும்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினார்கள்.
இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணி வழக்கம்போல் தங்களுடைய ஏமாற்று வேலையை செய்ய தொடங்கினார்கள். ஆஸ்திரேலியாவின் டிஎன்ஏவில் ஏமாற்று வேலை என்பது எப்போதுமே இருக்கும்.
இந்த நிலையில் ரஷித் கானுக்கு கேட்ச் பிடித்ததாக கூறி ஸ்டோனிஸ் உள்ளிட்ட மற்ற ஆஸ்திரேலிய வீரர்களும் கொண்டாடினர். ஆனால் ஆஸ்திரேலியா வீரர்களின் குணத்தை பற்றி தெரிந்து கொண்ட மூன்றாம் நடுவர் இது அவுட்டா இல்லையா என்று ரிப்ளேவில் பார்த்தார்.
அப்போது பந்து ஸ்டோனிஸ் கேட்ச் பிடிப்பதற்கு முன்பே தரையில் பட்டது தெரியவந்தது. இதனை எடுத்து இது நாட் அவுட் என மூன்றாம் நடுவர் அறிவித்தார்.
ஆனால் ஸ்டோனிஸ் டைம் கேட்ச் பிடித்து விட்டதாகவும் ஏதோ நடுவர் பொய் சொல்லிவிட்டார் என்பது போலவும் நடுவரின் முடிவை நம்பாத வகையில் மைதானத்தில் ரியாக்சன் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆப்கானிஸ்தானுடன் கூட நீங்கள் நியாயமாக விளையாட மாட்டீர்களா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.