ரன்களை குவித்த ஆஸ்திரேலியா.. இனி எதை செய்தால் இந்தியா வெல்ல முடியும்? விவரம் இதோ!

போட்டி துவங்குவதற்கு முன், மழை பெய்ததால், துவக்கத்தில் ஸ்விங் இருக்கும் எனக் கருதி, ரோஹித் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ரன்களை குவித்த ஆஸ்திரேலியா.. இனி எதை செய்தால் இந்தியா வெல்ல முடியும்? விவரம் இதோ!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். காபாவில், 1985ஆம் ஆண்டிற்கு பிறகு, டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த வெளிநாட்டு அணி வென்றதே கிடையாது. 

அப்படியிருக்கும்போது, ரோஹித் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. போட்டி துவங்குவதற்கு முன், மழை பெய்ததால், துவக்கத்தில் ஸ்விங் இருக்கும் எனக் கருதி, ரோஹித் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பிட்சில், துவக்கத்தில் ஸ்விங் அவ்வளவாக இல்லை. குறைந்த அளவுதான் ஸ்விங் இருந்தது. மேலும், பவுன்ஸ் தான் மிகவும் அதிகமாக இருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய பேட்டர்கள், துவக்கத்தில் பொறுமையுடன் விளையாடியதால், பிறகு ரன்களை சேர்த்தாக வேண்டும் என்ற நோக்கில் விளையாடியதால் மிக்ஸ்வீனி 9 (49), லபுஷேன் 12 (55), கவாஜா 21 (54) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர்ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடர்ந்து மிரட்டலாக விளையாட ஆரம்பித்தார்கள். ஒருபக்கம் ஸ்மித் நிதானமாக ரன்களை சேர்க்க, மறுபக்கம் டிராவிஸ் ஹெட், ஒருநாள் போட்டியில் விளையாடுவதுபோல் விளையாடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். 

இருவரும், சதம் எடுத்து, இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தினார்கள். இந்நிலையில், ஸ்மித் 101 (190), ஹெட் 152 (160) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். இறுதிக் கட்டத்தில் அலேக்ஸ் ஹேரி 88 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 70 ரன்களை குவித்து அசத்தினார். 

மேலும், கேப்டன் பாட் கம்மின்ஸும் 20 (33) கடைசி நேரத்தில் ஓரளவுக்கு பங்களிப்பை கொடுத்தார். மேலும், ஸ்டார்க்கும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 18 ரன்களை எடுத்ததால், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445/10 ரன்களை குவித்துள்ளது. பும்ரா 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

பிட்ச் போகபோக பௌலர்களுக்கு சாதகமாக மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்டா பவுன்ஸ் மற்றும் லேட் ஸ்விங் இனி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், இந்திய அணி நிதானமாக விளையாடியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்திய அணியானது, முதல் இன்னிங்ஸில் 400+ ரன்களை பெறவில்லை என்றால், தோல்வியை சந்திக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp