26 வயதில் 300 பேருடன் பாலியல் உறவு கொண்ட பெண்!
சாப்ட்வெர் வேலை ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த அன்னி, அவரின் ஆபாச தள கணக்கை அவர் பணியாற்றிய நிறுவனத்தின் பாஸ் பார்த்ததை அடுத்து திடீரென வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஆபாச இணையதளத்தில் கணக்கை தொடங்கி, வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி வருபவர் அன்னி நைட் (26). சமீபத்தில் இவர், இதுவரை 300க்கும் மேற்பட்ட நபர்களுடன் பாலியல் உறவு கொண்டுள்ளதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
சாப்ட்வெர் வேலை ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த அன்னி, அவரின் ஆபாச தள கணக்கை அவர் பணியாற்றிய நிறுவனத்தின் பாஸ் பார்த்ததை அடுத்து திடீரென வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் வேலை இழந்தது குறித்து அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு அன்னி நைட் பேட்டியளித்திருந்தார்.
அதில் அவர் கூறியதாவது "ஆபாசப் பட வாழ்க்கையால் நிச்சயம் தனிப்பட்ட வாழ்க்கையில் சங்கடங்கள் வரும் என்று அறிந்து இருந்தாலும் கூட இதற்காக வேலை போகும் என்று ஒரு நாளும் நினைக்கவில்லை.
ஆன்லைனில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை என்னை தினசரி வாழ்வில் சந்திப்போர் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற அச்சம் இருக்கவே செய்தது.
இதன் காரணமாகவே ஆபாசப் படங்களில் நடிப்பதை எனது வேலை உட்பட அன்றாட வாழ்க்கையில் இருந்து முடிந்தவரை விலக்கி வைத்திருந்தேன்.
ஆனாலும், அதே காரணத்தால் இப்போது நான் வேலையிழந்துள்ளேன். சமீபத்தில் புதிதாக ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். ஒரு வாரத்திற்கு பிறகு எனக்கொரு மெயில் வந்தது. அதில் எனது ஆபாச தள கணக்கு குறித்தும் ஸ்கிரீன் ஷாட்களை இணைத்திருந்தார்கள்.
இதன் காரணமாக என்னை வேலையை விட்டு நீக்குவதாக மெயிலில் கூறியிருந்தனர். திடீரென என்னை வேலையைவிட்டு நீக்கியது கஷ்டமாக இருந்தது" என்று அவர் கூறியுள்ளார்.