தூக்கத்தை தொலைத்த ஆஸ்திரேலியா.. அரை இறுதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. காத்திருக்கும் கண்டம்

இதில் பாகிஸ்தான் அணிக்குள் பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில், அந்த அணி அதையெல்லாம் தாண்டி, உலகக்கோப்பை அரை இறுதிக்குள் வருவது மிகவும் கடினம் என கருதப்படுகிறது. 

தூக்கத்தை தொலைத்த ஆஸ்திரேலியா.. அரை இறுதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. காத்திருக்கும் கண்டம்

2023 உலகக்கோப்பை தொடரில் 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி மாபெரும் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள ஆஸ்திரேலிய அணி அரை இறுதி வாய்ப்பை குறித்த பயத்தில் தான் இருக்கிறது.

குறிப்பாக இரண்டு அணிகள் ஆஸ்திரேலியாவை பயமுறுத்துகின்றன. அவை ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து. 2023 உலகக்கோப்பை தொடரின் 24 வது போட்டியில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் மோதின. 

இரு அணிகளுக்குமே இது லீக் சுற்றில் ஐந்தாவது போட்டி. இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 399 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து அணி 90 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியா 309 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. உலகக்கோப்பை வரலாற்றில் இதுவே பெரிய வெற்றி. இந்தப் போட்டிக்கு பின் ஆஸ்திரேலியா, புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியது.

புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். ஆனால், இன்னும் ஆஸ்திரேலியாவுக்கு நான்கு போட்டிகள் மீதமுள்ளன. அந்தப் போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றால் தான் அரை இறுதி வாய்ப்பு உறுதி எனக் கூற முடியும்.

தற்போது ஐந்து போட்டிகளில் இரண்டு தோல்விகளுடன் இருக்கிறது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஐந்து போட்டிகளில் ஆடி மூன்று தோல்விகள், இரண்டு வெற்றிகளுடன் தலா நான்கு புள்ளிகளுடன் உள்ளன.

இதில் பாகிஸ்தான் அணிக்குள் பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில், அந்த அணி அதையெல்லாம் தாண்டி, உலகக்கோப்பை அரை இறுதிக்குள் வருவது மிகவும் கடினம் என கருதப்படுகிறது. 

ஆனால், ஆப்கானிஸ்தான் அணி உத்வேகத்துடன் ஆடி வருகிறது. அடுத்து அந்த அணி நான்கு போட்டிகளில் ஆட வேண்டும். அதில் ஆஸ்திரேலியா அணியை சேர்த்து மூன்று போட்டிகளில் வென்றால் ஆஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்புக்கு சிக்கல் வரும்.

அதே போல, இங்கிலாந்து அணி தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. நான்கு போட்டிகளில் ஆடி வெறும் ஒரு வெற்றி மட்டுமே பெற்று உள்ளது. 

ஆனால், அந்த அணி அடுத்த ஐந்து போட்டிகளிலும் வெல்லும் வாய்ப்பு கொண்ட அணி தான். உலகத்தரமான வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அடுத்து என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதால் அந்த அணிக்கு எதிரான போட்டியில் வெல்ல வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது ஆஸ்திரேலியா.

ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளை தவிர வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் அரை இறுதிக்கு செல்லும் என்றார் நம்பிக்கை அளிக்கும் வகையில் இதுவரை ஆடவில்லை. அந்த அணிகள் மூன்றுமே தலா ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளன.

எனவே, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளை வீழ்த்தினால் மட்டுமே ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை அரை இறுதி வாய்ப்பு பிரகாசமாகும். அதுவரை எத்தனை பெரிய வெற்றிகளை பெற்றாலும் ஆஸ்திரேலியா தூக்கத்தை தொலைத்து தான் ஆக வேண்டும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...