Editorial

  • இலங்கை
    Photo of பிணைமுறி மோசடி கணக்காய்வில் வெளிநாட்டு நிபுணர்கள்

    பிணைமுறி மோசடி கணக்காய்வில் வெளிநாட்டு நிபுணர்கள்

    மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக நடத்தப்படவுள்ள தடயவியல் கணக்காய்வுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து நிபுணர்களின் உதவியைப் பெற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் இடம்பெற்ற முறைகேடுகளின் மூலம், 11,145 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், மோசடி மூலம் இழக்கப்பட்ட 11,145 மில்லியன் ரூபாயை மீட்பதற்கு, மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், முறைகேடுகளைக் கண்டுபிடிக்கவும்,…

    Read More »
  • இலங்கை
    Photo of 500 குளங்களை புனரமைக்கிறது இராணுவம்

    500 குளங்களை புனரமைக்கிறது இராணுவம்

    திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 500 நடுத்தர அளவுடைய குளங்களை இராணுவம் புனரமைப்புச் செய்யவுள்ளது. இராணுவத்தின் களப் பொறியியல் பிரிவு குளங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த 2016ஆம் அண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 16 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவத்தின் மூன்றில் ஒரு பகுதி ஆளணியை நாட்டின் அபிவிருத்தி வேலைக்குப் பயன்படுத்தும் திட்டம் ஒன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமையவே, குளங்களைப் புனரமைக்கும் வேலைகளில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில்…

    Read More »
  • அரசியல்
    Photo of ஒற்றையாட்சிக்கு கூட்டமைப்பு இணங்கவில்லை: சுமந்திரன்

    ஒற்றையாட்சிக்கு கூட்டமைப்பு இணங்கவில்லை: சுமந்திரன்

    நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டதாக கூறப்படுவது பொய் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஒஸ்மானியா கல்லூரி வீதியில் நேற்று மாலை நடந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவரை் தொடர்ந்து கூறுகையில், “ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சி அல்ல, புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என்று கூறப்பட்டுள்ளது. ‘ஏக்கிய இராஜ்ய’ என்பது ஒற்றையாட்சி அல்ல. அது ஒருமித்த நாடு என்றும் இடைக்கால…

    Read More »
  • இலங்கை
    Photo of இவ்வாரம் நாடாளுமன்றம் கூடும்

    இவ்வாரம் நாடாளுமன்றம் கூடும்

    மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக விவாதிக்க, சிறப்பு அமர்வு இந்தவாரம் நாடாளுமன்றத்தின் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டதை அடுத்து, அது தொடர்பான விவரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையொன்றின் ஊடாக வெளியிட்டிருந்தார். இதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கூட்டி இந்த அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சில கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக முடிவெடுக்க நாளை பிற்பகல்…

    Read More »
  • வேட்பாளராக நடிகையிடம் பாலியல் இலஞ்சம் கோரிய மஹிந்த அணி

    மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த நடிகை ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. நடிகை மதுஷா ராமசிங்கவிடம் இந்த பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து நடிகை மதுஷா ராமசிங்க தெரிவிக்கையில், “நடிப்பைக் கைவிட்டு விட்டு அரசியலில் ஈடுபட முடிவு செய்தேன். உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட அணுகினேன். வேட்புமனுக் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் பாலியல் இலஞ்சம் கோரினார். வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வேண்டுமானால் நிர்வாணமாக இருக்க வேண்டும்…

    Read More »
  • ஊழல் குற்றவாளிகளை தண்டிப்பதில் முன்னிற்போம்

    புதிய அரசியல் அமைப்பு விடயத்தில் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க மாட்டோம். அத்துடன், ஊழல் குற்றவாளிகளை தண்டிப்பதிலும் நாமே முன்னிற்போம் என, அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட்டாலும், திருத்தங்கள் வந்தாலும் சகல தரப்பினதும் அனுமதியுடனேயே இடம்பெறும் என்றும் கூறியுள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இன்று(07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.ஷ

    Read More »
  • இலங்கை
    Photo of இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு புதிய செயலாளர் நியமனம்

    இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு புதிய செயலாளர் நியமனம்

    இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானப்படை கொமாண்டர் ரொஷான் பியன்வில, புதிய செயலாளராக இன்று (07) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (07) நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்த நியமனம் இடம்பெற்றதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

    Read More »
  • அரசியல்
    Photo of பிரதமர் பதவி துறக்க தேவையில்லை – சந்திரிக்கா

    பிரதமர் பதவி துறக்க தேவையில்லை – சந்திரிக்கா

    பிரதமர் நியமனம் செய்தவர் திருடினார் என்பதற்காக பிரதமரைக் குற்றஞ்சாட்ட முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். அத்துடன், மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் கூறியுள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இன்று இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், “பிரதமர் நியமித்தவர் திருடினார் என்பதற்கு பிரதமர் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளார். எனினும், பிரதமர் அவருடன் சேர்ந்து திருடினார் என ஆகிவிடாது. இவ்வாறிருக்கையில், பிரதமர் ஏன் பதவி விலக வேண்டும்?…

    Read More »
  • அரசியல்
    Photo of பிரதமர் பதவி துறக்க வேண்டும் – சி.பி.ரத்நாயக்க

    பிரதமர் பதவி துறக்க வேண்டும் – சி.பி.ரத்நாயக்க

    நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர முன்னர், பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கைக்குப் பதிலளித்து பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுவதற்கு முன்னதாக அவர் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன், பிரதமர் மாத்திரமல்லாது ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஏனைய அமைச்சர்களும் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Read More »
  • இலங்கை
    Photo of சட்டத்தரணிகள் சங்க தேர்தல் அறிவிப்பு

    சட்டத்தரணிகள் சங்க தேர்தல் அறிவிப்பு

    பெப்ரவரி 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, அச்சங்கத்தின் செயலாளர் அமல் ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

    Read More »
  • சினிமா
    Photo of இடம் பொருள் ஆவி

    இடம் பொருள் ஆவி

    நடிகர்-திலக் சேகர் நடிகை -அனிஷா ஆம்ப்ரூஸ் இயக்குனர்-நவநீத் இசை- ரவி பஸ்ரூர் ஓளிப்பதிவு -சி.ஜே.மோகன் – பணக்கார வீட்டு பையனான திலக் சேகர் கேசினோவில் சூதாட்டத்தில் ஈடுபட்டு, தோல்வியடைகிறார். அவரது தங்கை அனிஷா ஆம்ப்ரூஸ். அனிஷாவின் பிறந்தநாளில் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறார் அவரது அப்பா. அந்த பார்ட்டியில் திலக்கின் நண்பர்களான ஆர்.ஜே.ரோஹத், அனு பூவம்மா, விஜய் செந்தர் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், திலக்கிடம் பணம் கேட்டு சிலர் பார்ட்டியில் ரகளை செய்கிறார்கள். தன் பிள்ளைகளிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் திலக்கின் அப்பா அவர்களுக்கு பணம்…

    Read More »
  • இலங்கை
    Photo of வட்ஸ்அப்பில் 7500 கோடி புத்தாண்டு வாழ்த்துக்கள்

    வட்ஸ்அப்பில் 7500 கோடி புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ஆங்கில புத்தாண்டையொட்டி சமூக வலைதளங்களில் வாழ்த்து செய்திகளும், வீடியோக்களும் வெகுவாக பரிமாறிக்கொள்ளப்பட்டது. இந்த புத்தாண்டை முன்னிட்டு உலகம் முழுவதும் சுமார் 75 பில்லியன் வாழ்த்துக்கள் அனுப்பப்பட்டதாக ஒரு அறிக்கையில் கூறுப்பட்டுள்ளது. அதாவது புத்தாண்டு அன்று மட்டும் 7500 கோடி வாழ்த்து செய்திகள் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதேபோல் மாதந்தோறும் 20 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். புத்தாண்டு அன்று பேஸ்புக்கில் 1300 கோடி புகைப்படங்கள் மற்றும் 500 கோடி வீடியோ காட்சிகள் அனுப்பப்பட்டுள்ளது. இப்படி ஒரே நேரத்தில் அனைவரும் வாழ்த்து செய்திகள்…

    Read More »
Back to top button
x
Close
Close