4 வருடம் திருந்தவில்லை.. கோலி சந்தித்த பிரச்சினை.. பாபர் அசாம் மீது பாய்ச்சல்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதற்கு பாபர் அசாம் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

4 வருடம் திருந்தவில்லை.. கோலி சந்தித்த பிரச்சினை.. பாபர் அசாம் மீது பாய்ச்சல்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதற்கு பாபர் அசாம் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இரண்டு வருடத்திற்கு முன் இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி எத்தகைய பிரச்சினைகளையும் விமர்சனங்களையும் சந்தித்தாரோ அதேபோல் ஒரு பிரச்சனையை தற்போது பாபர் அசாம் சந்தித்து வருகிறார்.

இதனால், விராட் கோலியை போல் பாபர் அசாமும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இது தொடர்பாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் மோயின் கான் அளித்துள்ள பேட்டியில், பாபர் அசாம் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இவ்வளவு காலமாக அவர் எதையும் கற்றுக் கொண்டது போல் எனக்கு தெரியவில்லை.

நெருக்கடியான சமயத்தில் எவ்வாறு கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்று இன்னும் அவர் பழகிக் கொள்ளவில்லை. விக்கெட்டுகள் தேவைப்படும்போது பீல்டர்களை பேட்ஸ்மேன்கள் அருகே நிறுத்த வேண்டும். 

ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கு இதுபோன்ற யுக்திகளை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் பேட்ஸ்மன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்த முடியும். ஆனால் இது எதுவுமே பாபர் அசாம் செய்யவில்லை.

இதை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள் என மோயின் கான் குற்றம் சாட்டினார். 

இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்ஹக் ஹரிஷ் ரவுப் தற்போது நம்பிக்கை கொண்டு இருக்கிறார். அப்படி இருக்கும்போது பவர் பிளவில் ஹரிஷ் ரவுப்க்கு ஓவரை வழங்கினால் அது மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும்.

அவருடைய முதல் ஓவரில் 18, 20 ரன்கள் சென்றது. இதன் மூலம் பவுலர்களின் நம்பிக்கை மேலும் பாதிக்கப்படும். நியூசிலாந்து அணியை பாருங்கள் அவர்கள் எட்டு அல்லது ஒன்பதாவது ஓவரில் மிக்சில் சான்ட்னரை பயன்படுத்துகிறார்கள்.

பவர் பிளே முடியப்போகிறது. நாம் அதிரடியாக விளையாட வேண்டும் என சுழல் பந்துவீச்சாளர்கள் ஒவரை அடித்து ஆட முற்படும்போது விக்கெட் கிடைக்கின்றது. இது போன்ற யுக்தியை பாகிஸ்தான் அணியும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

பவுண்டரி லைனில் நான்கு பீல்டர்கள் நின்றால் அது ஹரிஸ் ரவுபின் நம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் விக்கெட்டுகள் விழும் வாய்ப்பு இருக்கிறது. 

ஆனால் ஹாரிஸ் ரவுப் முதல் ஓவரிலே நிறைய பவுண்டரிகளை கொடுத்து விடுகிறார். இதன் மூலம் அவருடைய நம்பிக்கை முழு போட்டியிலும் பாதிக்கப்படுகிறது என மிஸ்பா உல் ஹக் குற்றம் சாட்டினார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp