கிரிக்கெட்டுக்கே அவமானம்.. பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் செய்த செயல்.. ரசிகர்கள் விளாசல்
குறிப்பாக ஷகிப் அல் ஹசன் செய்ததில் ஒரு விஷயம் கிரிக்கெட் விளையாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். என்ன தவறு செய்தார் ஷகிப்?
பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன், ஏஞ்சலோ மேத்யூஸ்-க்கு டைம் அவுட் கோரியது கிரிக்கெட்டுக்கு ஏற்பட்ட அவமானம் என ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக ஷகிப் அல் ஹசன் செய்ததில் ஒரு விஷயம் கிரிக்கெட் விளையாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். என்ன தவறு செய்தார் ஷகிப்?
பங்களாதேஷ் - இலங்கை அணிகள் இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்களை இழந்த நிலையில் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்ய களத்துக்கு வந்தார்.
அப்போது அவரது ஹெல்மட் சரியில்லை என வேறு ஹெல்மட் மாற்றினார். இந்த ஹெல்மட் மாற்றம் நடக்க மூன்று நிமிடங்களுக்கும் மேல் ஆகி விட்டது. விதிப்படி ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகி, அடுத்த பேட்ஸ்மேன் பந்தை சந்திக்க மூன்று நிமிடங்களுக்கும் மேல் ஆனால் அவர் அவுட் என அறிவிக்க முடியும்.
இந்த நிலையில், ஷகிப் அல் ஹசன் கால தாமதம் குறித்து புகார் அளிக்கவே அம்பயர் அவுட் என அறிவித்தார். அப்போது ஏஞ்சலோ மேத்யூஸ் தான் இதை வேண்டுமென்றே செய்யவில்லை. ஹெல்மட் சரியில்லாமல் ஆட முடியாது என்பதால் தான் இப்படி செய்தேன் எனவும், தான் எப்போது கிரீஸுக்கு வந்து விட்டேன் எனவும் அவர் விளக்கினார்.
ஷகிப் அல் ஹசன் அப்போது நினைத்து இருந்தால் தன் அவுட் கோரிக்கையை திரும்பப் பெற்று, மேத்யூஸ் தொடர்ந்து பேட்டிங் ஆடி இருக்கலாம்.
ஆனால், அப்படி செய்ய விரும்பவில்லை ஷகிப் அல் ஹசன். அவரை பவுலிங் வீசி அவரை அவுட் ஆக்காமல், இரண்டு நிமிட தாமதத்தை காரணம் காட்டி அவுட் ஆக்கினார். அது தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
மேத்யூஸ் வேண்டுமென்றே இதை செய்யவில்லை. அவர் களத்துக்கு வந்து விட்டார். ஆனால், ஹெல்மட்டில் ஏதோ பிரச்சனை உள்ளது. இது நியாயமான ஒரு விஷயம் தான். இதற்கு ஒரு வீரரை ஆட்டமிழக்கச் செய்தால் கிரிக்கெட் என்ற விளையாட்டை ஏன் இனி ஆட வேண்டும்?
இந்த விளையாட்டின் மையமே பந்து வீசி பேட்ஸ்மேனை அவுட் ஆக்குவது தான். ஆனால், நியாயமான காரணத்தை புறக்கணித்து, சொத்தையான காரணத்தை முன்வைத்து ஷகிப் அல் ஹசன் அவுட் கேட்டது ரசிகர்களை கோபத்துக்கு ஆளாக்கி இருக்கிறது, எந்த அளவிற்கு என்றால், இனி ஷகிப் அல் ஹசன் பெயரைக் கேட்டாலே ரசிகர்களுக்கு இந்த சம்பவம் தான் ஞாபகத்துக்கு வரும் அளவுக்கு.