நெதர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்... வெளியேறியது இலங்கை அணி!
டி20 உலகக்கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்த்து விளையாடிய நெதர்லாந்து அணி டாஸ் வென்ற பவுலிங்கை தேர்வு செய்தது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்த்து விளையாடிய நெதர்லாந்து அணி டாஸ் வென்ற பவுலிங்கை தேர்வு செய்தது.
களமிறங்கிய வங்கதேசம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஷகிப் அல் ஹசன் 46 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.
களமிறங்கிய நெதர்லாந்து அணி 14 ஓவர்களில் 104 ரன்களை எட்டியது. அப்போது ரிஷாத் ஹொசைன் வீசிய 15வது ஓவரில் ஏங்கல்பிரட் 33 ரன்களிலும், தொடர்ந்து வந்த பேஸ் டீ லீட் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
இதனால் நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 49 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது முஸ்தஃபிசுர் ரஹ்மான் வீசிய முதல் பந்திலேயே கேப்டன் எட்வர்ட்ஸ் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆட்டத்தில் வங்கதேச அணியின் கைகள் ஓங்கியது.
நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீச மீண்டும் முஸ்தஃபிசுர் ரஹ்மான் வந்தார்.
அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் வங்கதேசம் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக வங்கதேச அணி சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. அதேபோல் இலங்கை அணி குரூப் சுற்றுடன் வெளியேறியுள்ளது.