ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் விதிவிலக்கா? கொந்தளித்த ரோகித் சர்மா.. பதறிய பிசிசிஐ...

மன சோர்வு என்று கூறி இந்திய அணியில் இருந்து வெளியேறிய இசான் கிசான் தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாடாமல் இருக்கிறார்.

ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் விதிவிலக்கா? கொந்தளித்த ரோகித் சர்மா.. பதறிய பிசிசிஐ...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் இந்த சூழலில் நட்சத்திர வீரர்கள் பலர் இந்த தொடரில் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்காக பயிற்சி செய்து வருவது செய்திருக்கிறது குறிப்பாக 

மன சோர்வு என்று கூறி இந்திய அணியில் இருந்து வெளியேறிய இசான் கிசான் தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாடாமல் இருக்கிறார்.

இதனையடுத்த, உள்நாட்டு போட்டிகளில் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் தயாரானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிசிசிஐ எச்சரிக்கை விடுத்து இருந்தது. 
அத்துடன், அவ்வாறான வீரர்களின் இந்திய கிரிக்கெட் அணிக்கான ஒப்பந்தமும் ரத்து செய்யப்படும் என்றும்  கடுமையாக கூறி இருந்த நிலையில், இசான் கிஷன் தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார்.

இந்த நிலையில், கடைசியாக ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாடிய ஹர்திக் பாண்டியா,  காயம் காரணமாக பாதியில் வெளியேறியதுடன், தற்போது எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

டி20 உலக கிண்ணத்தை இந்தியா வெல்வது உறுதி... கேப்டன் யார் தெரியுமா? சத்திய செய்யும் ஜெய்ஷா!

இவ்வாறான ஒரு சூழலில் ரஞ்சிக்கோப்பையில் விளையாடாமல் பயிற்சி செய்யும் வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை கொடுத்திருக்கும் போது ஹர்திக் பாண்டியா மட்டும் தனியாக பயிற்சி செய்ய அனுமதிப்பது ஏன் என்று ரோகித் சர்மா பிசிசிஐ நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பி அதிர்ச்சி கொடுத்து உள்ளார்.

இதனையடுத்து, ஹர்திக் பாண்டியாவுக்கு விதிவிலக்கு அளித்தது ஏன் என்பது குறித்து பி சி சி ஐ  விளக்கம் அளித்துள்ளது.

அதில் ஹர்திக் பாண்டியாவால் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்றும் ஐசிசி தொடர்களில் ஹர்திக் பாண்டியாவின் முழு உடல் தகுதி இந்திய அணிக்கு தேவை என்பதால் தான் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக கூறி உள்ளது.

அத்துடன், இனி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட சில வீரர்களால் முடியாது என்று பிசிசிஐக்கு தெரியும் என்பதால் சிலருக்கு இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இதேவேளை, இளம் வீரர்கள் குறைந்தபட்சம் மூன்று நான்கு ரஞ்சிப் போட்டியில் விளையாடினால் மட்டுமே ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதி பெறுவார்கள் என்றும் பி சி சி ஐ கூறியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...