உலக கோப்பை அணியில் உறுதியான 10 பேர்... பிசிசிஐயில் இருந்து கசிந்த தகவல்... பட்டியல் இதோ!
ஜுன் மாதம் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஜுன் மாதம் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய, பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் நிர்வாகிகளை நியமித்தார்.
தற்போது, பிட்ச்கள் குறித்த அறிக்கையில், போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பௌலர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ஸ்லோ விக்கெட்டில் கோலி அபாரமாக ஆடக் கூடியவர் என்பதால், அவர் நிச்சயம் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கான அணி மீட்டிங்கில், விராட் கோலியை ஓபனராக களமிறக்க வேண்டும் என ரோஹித் சர்மா கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு அணி நிர்வாகமும் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற பிசிசிஐ மீட்டிங்கில், டி20 உலகக் கோப்பைக்காக 20 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்துள்ளனர். இதில், 15 பேர் அணியிலும், 5 பேர் ரிசர்வ் வீரர்களாக இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், 10 வீரர்களின் இடம் உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, யாஷஸ்வி ஜெய்ஷ்வால், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய 10 வீரர்களின் இடங்கள் உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீதமுள்ள 5 இடங்களுக்கான போட்டியில் ஷுப்மன் கில், ரிங்கு சிங், அக்சர் படேல், யுஜ்வேந்திர சஹல், ரவி பிஷ்னோய், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோர் இருக்கிறார்கள்.