"நாட்டாமை தீர்ப்ப மாத்துங்க" விராட் கோலி அதிருப்தி... முடிவை மாற்றிய பிசிசிஐ!

45 நாள் சுற்றுப்பயணத்தின்போது வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

"நாட்டாமை தீர்ப்ப மாத்துங்க" விராட் கோலி அதிருப்தி... முடிவை மாற்றிய பிசிசிஐ!

இந்திய அணியின் நட்சத்திர வீரர், விராட் கோலியின் அதிருப்தியை அடுத்து இந்திய வீரர்களுக்கு விதித்த முக்கிய கட்டுப்பாட்டை தளர்த்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு பல்வேறு புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டன.

அதன்படி, 45 நாள் சுற்றுப்பயணத்தின்போது வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

மனைவியை அழைத்து செல்ல முடியாதா... பிசிசி விதிக்கு எதிராக பொங்கிய விராட் கோலி... என்ன சொன்னார் தெரியுமா?

அத்துடன், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியின்போதும் வீரர்களின் குடும்பத்தினர் இரண்டு வாரங்களுக்கு மேல் தங்க அனுமதிக்கப்படவில்லை.

இந்த  நிலையில், குறித்த விதிமுறைகள் குறித்து பேசிய இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி, "குடும்பத்தினரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாதவர்களால் இதுபோன்ற விதிமுறைகள் உருவாக்கப்படுவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது" என்று அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, வெளிநாட்டு தொடர்களுக்கு குடும்பத்தினரை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை பிசிசிஐ நீக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.