டுபாய்க்கு புறப்பட்ட அனுஷ்கா, ரித்திகா.. கம்பீர் விதித்த கட்டுப்பாடு... பிசிசிஐ போட்ட உத்தரவு!

இந்திய அணி வீரர்களுடன் அவர்களுடைய மனைவி வந்து தங்கியது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், அவர்களை அழைத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

டுபாய்க்கு புறப்பட்ட அனுஷ்கா, ரித்திகா.. கம்பீர் விதித்த கட்டுப்பாடு... பிசிசிஐ போட்ட உத்தரவு!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள், 15ஆம் தேதி டுபாய்  செல்லவுள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்ல மறுத்த நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகளில் டுபாயில் நடைபெறுகின்றது.

இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் டுபாயில் நடப்பதுடன், இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றால், இறுதிப்போட்டி டுபாய்க்கு மாற்றப்படும். இல்லையென்றால் பாகிஸ்தானில் இறுதிப்போட்டி நடக்கும்.

டி20யில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றாலும், ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி இறுதி போட்டி வரை வந்து தோல்வியை தழுவியதால், எப்படியாவது சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் பிசிசிஐ இருக்கிறது. 

ஆஸ்திரேலியா தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா பெரும் அவமானங்களை சந்தித்ததால் இம்முறை சாம்பியன்ஸ் கோப்பை வென்று ரசிகர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளனர்.

இந்திய அணி வீரர்களுடன் அவர்களுடைய மனைவி வந்து தங்கியது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், அவர்களை அழைத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

3 வாரம் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மூன்று லீக் ஆட்டத்தில் இந்தியா மூன்றிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். இதன் காரணமாக கடும் நெருக்கடியை என்பதால், வீரர்கள் ஒவ்வொருவரும் முழு கவனத்துடன் இருக்க வேண்டும்.

இந்த நிலையில், டுபாய்க்கு மனைவிகளுடன் கிரிக்கெட் வீரர்கள் வந்தால் அது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கம்பீர் கூறுகின்றார்.

பிசிசிஐயின் புதிய விதிப்படி இந்திய அணி வீரர்களின் மனைவி ஒரு வாரம் டுபாய் வந்து தங்கலாம். ஆனால் முதல் வாரத்திலேயே இந்தியா இரண்டு லீக் போட்டிகளில் விளையாடுகிறது. 

அந்த இரண்டிலும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதால், கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் இந்த தொடருக்கு வரக்கூடாது என கம்பீர் பிசிசிஐயிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, பிசிசிஐயும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு மனைவிகளை அழைத்துச் செல்லக்கூடாது என வீரர்களிடம் கராராக கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp