இளம் வீரர் முதுகில் குத்திய பிசிசிஐ.. பெரும் அநியாயம்.. ரசிகர்கள் குமுறல்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

இளம் வீரர் முதுகில் குத்திய பிசிசிஐ.. பெரும் அநியாயம்.. ரசிகர்கள் குமுறல்!

இந்திய டி20 அணித் தேர்வில் புவனேஸ்வர் குமாரை பிசிசிஐ புறக்கணித்து இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

நீண்ட காலமாக டி20 அணியில் இடம் பெறாத ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 

விராட் கோலி 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்து இருந்தார். ஆனால், ரோஹித் சர்மா கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தான் ஆடிய எந்த டி20 தொடரிலும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.

ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ வைத்த ஆப்பு... ஆட்டத்தை கலைத்த ரோகித் சர்மா!

ஆனால், அவரை அணியில் சேர்த்ததுடன் பிசிசிஐ கேப்டன் பதவியையும் கொடுத்துள்ளதாகவும், ஆனால் உள்ளூர் போட்டிகளில் தன்னை நிரூபித்து இருக்கும் புவனேஸ்வர் குமாருக்கு டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை எனவும் ரசிகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் புவனேஸ்வர் குமார்  சிறப்பாக பந்து வீசி இருந்தார். 7 போட்டிகளில் 16 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் நான்காம் இடத்தை பெற்று இருந்தார். 

அவரை முக்கிய வேகப் பந்துவீச்சாளராக அணியில் தேர்வு செய்யாவிட்டாலும் கூட மாற்று பந்துவீச்சாளராகவாவது தேர்வு செய்யலாம் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. 

பும்ரா, முகமது ஷமிக்கு அடுத்து அதிக அனுபவம் கொண்ட வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் தான். ஆனால், அவருக்கு ஒருநாள் அணியை அடுத்து, டி20 அணியிலும் கூட இடம் அளிக்கப்படவில்லை என ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp