என்ன இதெல்லாம்.. கதை சொல்லியே கழுத்தை அறுத்துட்டீங்களே.. கடுப்பான பேன்ஸ்!
கடந்த வாரம் பவா செல்லதுரை சொன்ன கதை சர்ச்சையான நிலையில், அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்கிற பேரில் கமல் கதை சொல்லி ரசிகர்களை கடுப்பாக்கி விட்டார்.
கடந்த வாரம் பவா செல்லதுரை சொன்ன கதை சர்ச்சையான நிலையில், அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்கிற பேரில் கமல் கதை சொல்லி ரசிகர்களை கடுப்பாக்கி விட்டார்.
கடந்த வாரம் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்ஷயா உதயகுமார், விகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பவா செல்லத்துரை
இதில், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் கதை சொல்லி என பன்முகத்தன்மை கொண்டவரான பவா செல்லதுரை, கல்கி உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் புத்தங்களை தனக்கே உரியபாணியில் கதை சொல்லி இளைஞர்களின் மத்தியில் பிரபலமானார்.
பாலசந்திரன் சுள்ளிக்காடு
இந்த சூழலில் இன்று பவா செல்லதுரை ஹவுஸ் மேட்ஸுக்கு பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய கதையை கூறினார். அந்தக் கதையில் பாலசந்திரன் வீட்டில் யாருமில்லாத பிற்பகலில் அமர்ந்து ஒரு நூலை வாசித்துக் கொண்டிருக்கிறார் கவிஞர். கதவு தட்டப்படுகிறது. ஊறுகாய் விற்பதற்காக ஓர் இளம்பெண் வந்திருக்கிறார். அந்தப் பெண் அழகாக இருக்கிறார்.
சர்ச்சையான கதை
தனிமை, யாருமில்லை என்கிற காரணம் இவையெல்லாம் ஒன்றாக, அத்துமீறி அந்தப் பெண்ணைத் தொட்டு விடுகிறார். பளார் என்று அவருக்கு ஒரு அறை விழுகிறது. கதை முடியும்வரை ஹவுஸ் மேட்ஸ் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர். கதை முடிந்தவுடன் மாயாவும், பூர்ணிமாவும் இந்த கதையில் உடன்படி முடியாமல், என தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
மேலும் அவர் சொல்வது எப்படி இருக்கிறது என்றால், ஒரு தவறு செய்துவிட்டு அதை ஒத்துக்கொண்டால் அது சரி என்பது போல் இருக்கிறது என்று இருவரும் அந்த கதை குவித்து சர்ச்சையை கிளப்பி இருந்தனர்.
பெரிய ஸ்டோரி
சனிக்கிழமை மாஸ் என்ட்ரி கொடுத்திருந்த கமல்ஹாசன், பவா செல்லத்துரை சொன்ன கதை குறித்து பேசினார். அப்போது, பவா செல்லத்துரை உங்களுக்கு கதையை சரியாக சொல்லவில்லை. நீங்கள் கதையில் ஈடுபாடு இல்லாமல் இருந்ததால், அவர் அவ்வாறு சொல்லிவிட்டார். இதை அந்த கதையை நான் சொல்கிறேன் என்று குட்டி ஸ்டோரியை சொல்லாமல் பெரிய ஸ்டோரியாக சொல்லி ரசிகர்களை கடுப்பாக்கிவிட்டார்.
என்ன ஆண்டவரே
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒருவாரமான நிலையில், விவாதிக்க பல விஷயங்கள் இருந்த போதும், கமல் சொன்ன கதையை கேட்டு டென்ஷனான ரசிகர்கள் என்ன ஆண்டவரே இதெல்லாம்.. கதை சொல்லியே கழுத்தை அறுத்துட்டீங்களே என இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.