பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரம்.. இவருக்குத்தான் அதிகம்
பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரம்: இந்த சீசனில் என்ன நடந்ததோ தெரியவில்லை பெரும்பாலும் பிரபலமாகாதவர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரம்
பிக்பாஸ் ஏழாவது சீசனில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
பிக்பாஸ் ஏழாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியிருக்கிறது.
மொத்தம் 100 நாட்கள் நடக்கவிருக்கும் போட்டியில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா, அக்ஷயா உதயகுமார் ஆகிய 18 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
பிக்பாஸின் முதல் சீசனிலிருந்து ஆறாவது சீசன்வரை பெரும்பாலும் பிரபலமான போட்டியாளர்களே கலந்துகொண்டனர். ஆனால் இந்த சீசனில் என்ன நடந்ததோ தெரியவில்லை பெரும்பாலும் பிரபலமாகாதவர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களில் யுகேந்திரன், கூல் சுரேஷ் மட்டுமே பிரபலமானவர்களாக இருக்கிறார்கள்.
பிரபலமானவர்கள் இறக்கப்படாததாலோ என்னவோ பிக்பாஸில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதன்படி இந்த சீசன் இரண்டு வீடுகளில் நடைபெறுகிறது.
பிக்பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. வீட்டுக்குள் வந்த முதல் நாளே ஆறு பேர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். எப்படியாவது இந்த சீசனை சுவாரசியமாக கொண்டு செல்ல சேனல் நிர்வாகம் கங்கணம் கட்டி இறங்கியிருக்கிறது.
இதன் காரணமாக எப்போதும் இல்லாத மாதிரி இந்த முறை முதல் வாரமே எவிக்ஷனுக்கான நாமினேஷன் பிராசஸ் ஆரம்பித்திருக்கிறது. அதுவும் ஒன்றில்லை இரண்டு.
மொத்தம் ஏழு பேர் இதுவரை எவிக்ஷன் லிஸ்ட்டில் இருக்கின்றனர். அதேபோல் இரண்டாவது நாளிலிருந்தே வீட்டுக்குள் பஞ்சாயத்தும் ஆரம்பித்திருக்கிறது.
இந்நிலையில் பிக்பாஸில் கலந்துகொண்டிருக்கும் 18 பேருக்கு வழங்கப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி அதிகபட்சமாக எழுத்தாளர் பவா செல்லதுரைக்கு 28 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறதாம். அவருக்கு அடுத்ததாக விசித்திராவுக்கும், யுகேந்திரனுக்கும் 27 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
அதேபோல் விஷ்ணுவுக்கு 25 ஆயிரம் ரூபாய், பிரதீப் ஆண்டனி மற்றும் வினுஷாவுக்கு 20 ஆயிரம் ரூபாய், கூல் சுரேஷுக்கு 18 ஆயிரம் ரூபாய், மாயா கிருஷ்ணனுக்கு 18 ஆயிரம் ரூபாய், சரவண விக்ரமுக்கு 18 ஆயிரம் ரூபாய், ரவீனாவுக்கு 18ஆயிரம் ரூபாய், மணிச்சந்திராவுக்கு 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
அடுத்தடுத்த இடங்கள்: இவர்களுக்கு அடுத்ததாக அக்ஷயா உதயகுமாருக்கு 15 ஆயிரம் ரூபாய், விஜய் வர்மாவுக்கு 15 ஆயிரம் ரூபாய், ஐஷு, பூர்ணிமா ரவிக்கு 15 ஆயிரம் ரூபாய், ஜோவிகாவுக்கு 13 ஆயிரம் ரூபாய், நிக்ஸனுக்கு 13 ஆயிரம் ரூபாய், அனன்யா ராவுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பிக்பாஸ் சொல்வதற்கு ஏற்ப பவா செல்லதுரைக்குத்தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.