கூல் சுரேஷை பெயருக்கு முன்னாடி பூ போட்டு கூப்பிடுறாங்களாம்?

போன சீசனில் ஜிபி முத்து என்ன பேசப் போறாரோ என பயந்து கொண்டிருந்த ரசிகர்களை போல இந்த சீசன் கூல் சுரேஷ் பேச்சுக்கு பலரும் பயந்து வருகின்றனர்.

கூல் சுரேஷை பெயருக்கு முன்னாடி பூ போட்டு கூப்பிடுறாங்களாம்?

சும்மாவே தியேட்டர் முதல் நாள் ஷோவில் அலப்பறையை கிளப்பும் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் போதே விஸ்வரூபம் பிரச்சனை காரணமாக கமல்ஹாசன் நாட்டை விட்டே ஓடப் போகிறேன் என பேசியதை நினைவுப்படுத்தி ஆண்டவரையே அலற வைத்து விட்டார்.

போன சீசனில் ஜிபி முத்து என்ன பேசப் போறாரோ என பயந்து கொண்டிருந்த ரசிகர்களை போல இந்த சீசன் கூல் சுரேஷ் பேச்சுக்கு பலரும் பயந்து வருகின்றனர். இந்நிலையில், அப்படியொரு பேச்சை அவரும் அசால்ட்டாக பேசி பலரையும் ஷாக் ஆக்கி உள்ளார்.

பவா செல்லதுரையா புவா சந்திரனா?: எழுத்தாளர் பவா செல்லதுரை இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை நேரில் சென்றே பார்த்து விடலாம் என போட்டியாளராக மாறியுள்ளார். 

சின்னத்திரை நடிகர் விஷ்ணு பவா செல்லதுரையை நாமினேட் செய்யும் போது புவா சந்திரன் என பேச அப்படியொரு போட்டியாளரே இல்லை என பிக் பாஸ் கலாய்த்து தள்ளி விட்டார்.

இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா

கடைசியாக வந்த விஜய் வர்மாவை கேப்டனாக்கி விட்டார் பிக் பாஸ். தன்னை பெயர் சொல்லி அழைக்க சொன்ன காரணத்திற்காக பவா செல்லதுரையை சின்ன வீட்டுக்கு அனுப்பி விட்டார் விஜய். அவர் அப்படி சொன்னது தனக்கு பிடிக்கவில்லை என விஜய் சொன்ன காரணத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.

குறுக்கே புகுந்த கூல் சுரேஷ்

அந்த பஞ்சாயத்தில் குறுக்கே புகுந்து பேசிய கூல் சுரேஷ் பெயரை சொல்லித் தான் கூப்பிட வேண்டும் என்று சொன்ன அவர், என்னுடைய பெயர் கூல் சுரேஷ், ஆனால், என் பெயரை எப்படி கூப்பிடுறாங்க தெரியுமா என சொல்லி விட்டு கூவுக்கு முன்னாடி பூ போட்டு கூப்பிடுறாங்க என அப்படியே வெளிப்படையாக பேசி சக போட்டியாளர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டார்.

ஷாக் கொடுத்த கூல் சுரேஷ்

நான் சொல்றத நீங்க நம்பலைன்னா என் வீடியோவுக்கு கீழ் யூடியூபில் உள்ள கமெண்ட்டுகளை பாருங்க என்றும் என் நாக்கு பொய்யே பேசாது என்றும் பேச அவரை யாராவது கன்ட்ரோல் பண்ணுங்கப்பா என பிக் பாஸ் ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp