Bigg Boss Tamil 7 Launch Live: பிக்பாஸ் சீசன் தொடங்கியது
Bigg Boss Tamil 7 Launch Live Updates: விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்துக் கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
Bigg Boss Tamil 7 Launch Live Updates: ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த அந்த நாட்கள் மீண்டும் வந்துவிட்டது. 2017 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பயணம், 6 சீசன்களைக் கடந்து இன்று 7 ஆவது சீசனில் களமிறங்குகிறது.
ரசிகர்களே! உங்கள் பொழுதுபோக்கிற்கு கேரண்டி தரும் விஜய் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 7 இன்று கோலாகலமாக ஆரம்பமாகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 1 இன் தொடக்கமானது தமிழ் கலாச்சாரத்திற்கு ஒரு புதிய வகையான பொழுதுபோக்கை கொண்டு வந்தது. முதல் சீசன் அபார வெற்றி பெற்றது. ஓவியா மற்றும் ஜூலியைச் சுற்றிய சர்ச்சைகள் காரணமாக இதுபோன்ற வித்தியாச நிகழ்ச்சிகளை விரும்பாதவர்கள் கூட பார்க்க தொடங்கினார்கள்.
வருடங்கள் செல்லச் செல்ல, நிகழ்ச்சிக்கான ஆரம்ப மோகம் மெதுவாகக் குறைந்தது, இது எந்த வகையான ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் கண்டிப்பாக நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோக்களில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் நிகழ்ச்சியாக தொடர்கிறது.
பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் பரபரப்பு ஆகியவற்றில் தெளிவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, ஆனால் அதை அனுபவிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகமாக உள்ளது. ஏனெனில் இந்த சீசனில் ஒன்றல்ல இரண்டு வீடுகள் இருக்க வேண்டும் என்று நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் முடிவெடுக்கும் அளவுக்கு நிகழ்ச்சி உயர்ந்துள்ளது.
கடந்த சீசன், தொலைக்காட்சி நடிகரான முகமது அசீம் டைட்டிலை வென்றதுடன் முடிந்தது. மறுபுறம், விக்ரமன், தனது சமூக செயல்பாட்டிற்காக விரும்பப்பட்டு, இரண்டாம் இடத்தைப் பிடித்தார். கடந்த சீசனும், எல்லா சீசன்களையும் போலவே, சர்ச்சைகள் நிறைந்ததாக இருந்தது. இறுதி தீர்ப்பு கூட ரசிகர்களிடம் விமர்சனங்களைப் பெற்றது.
கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 சுமார் 105 நாட்கள் நீடித்தது, இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஷிவின், அசால் கோலார், ஏ.டி.கே, தனலட்சுமி, அமுதவாணன் மற்றும் மைனா நந்தினி ஆகியோர் கடந்த முறை முத்திரை பதித்த சில போட்டியாளர்கள்.
கடந்த சீசனில் வித்தியாசம் எதுவும் இல்லை என்றாலும், அக்டோபர் 1-ம் தேதி கிக்ஸ்டார்ட் செய்யவிருக்கும் சீசன் 7 குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டிருக்கும். இரண்டு வீடுகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இரண்டும் எப்படிப் பயன்படுத்தப்பட போகிறது என்பது குறித்து ரசிகர்களின் மனதில் பல கேள்விகள் நீடித்து வருகின்றன.
பல்வேறு படி நிலைகள் இருக்குமா? அல்லது ஹவுஸ்மேட்கள் இரண்டு வீடுகளுக்கும் இடையில் மாற்றப்படுவார்களா? இரண்டு வீடுகளிலும் விதிகள் வேறு வேறாக இருக்குமா? இரண்டு பிக் பாஸ்கள் இருப்பார்களா? மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக, போட்டியாளர்களாக யார் இருப்பார்கள் என்பதை அறிய நிறைய எதிர்பார்ப்பு உள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
Bigg Boss Tamil 7 Launch Live Updates
09:17 pm
விக்ரம் படத்தில் நடித்த நடிகை மாயா 12-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார்
08:57 pm
11 வது போட்டியாளராக நடிகர் விஷ்ணு பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் 10வது போட்டியாளராக ஐஷு அறிமுகம் #biggbosstamil7 #BiggBossTamil #BBTamilSeason7 #பிக்பாஸ் #biggbosstamil #biggbosstamil7 #KamalHassan #Aishu #AmirAhnaf pic.twitter.com/nhMP0rcCTr — ColomboTamil (@TheColomboTamil) October 1, 2023
08:30 pm
ஒன்பதாவது போட்டியாளராக வனிதாவின் மகள் ஜோவிகா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்
ஒன்பதாவது போட்டியாளராக வனிதாவின் மகள் ஜோவிகா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார் #biggbosstamil7 #BiggBossTamil #BBTamilSeason7 #பிக்பாஸ் #biggbosstamil #biggbosstamil7 #KamalHassan #Jovika #vanitha pic.twitter.com/1uZmrdlXqc — ColomboTamil (@TheColomboTamil) October 1, 2023
08:16 pm
எட்டாவது போட்டியாளராக லவ் டுடே படத்தில் நடித்த அக்ஷயா உதயகுமார் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்
எட்டாவது போட்டியாளராக லவ் டுடே படத்தில் நடித்த அக்ஷயா உதயகுமார் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்#biggbosstamil7 #BiggBossTamil #BBTamilSeason7 #பிக்பாஸ் #biggbosstamil #biggbosstamil7 #KamalHassan #akshyaudayakumar pic.twitter.com/bNQFjx20Eb — ColomboTamil (@TheColomboTamil) October 1, 2023
08:06 pm
ஏழாவது போட்டியாளராக டான்சர் மணி சந்திரா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்
ஏழாவது போட்டியாளராக டான்சர் மணி சந்திரா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்#biggbosstamil7 #BiggBossTamil #BBTamilSeason7 #பிக்பாஸ் #biggbosstamil #biggbosstamil7 #KamalHassan #manichandra pic.twitter.com/jVG8wJBODu — ColomboTamil (@TheColomboTamil) October 1, 2023
08:04 pm
வினுஷா தேவிக்கு கருப்பு வைரத்தை கமல்ஹாசன் பரிசாக வழங்கினார்
தனது நிறத்தால் பல தடைகளை சந்தித்தேன் என பேசிய நிலையில் கமல் கருப்பு வைரத்தை பரிசாக கொடுத்தார்
07:51 pm
பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் 6வது போட்டியாளராக வினுஷா தேவி பங்கேற்பு
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் வினுஷா தேவி
ஆறாவது போட்டியாளராக பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்த வினுஷா தேவி #biggbosstamil7 #BiggBossTamil #BBTamilSeason7 #பிக்பாஸ் #biggbosstamil #biggbosstamil7 #KamalHassan #vinushadevi pic.twitter.com/SFBv4juyHH — ColomboTamil (@TheColomboTamil) October 1, 2023
07:47 pm
பிரதீப் ஆண்டனி கேப்டனாக தொடர்கிறார்
நெக்சன் பிரதீப் ஆண்டனியுடன் போட்டிப் போடாமல் கேப்டன்சியை இழந்து விட்டார்
07:39 pm
பிக் பாஸ் தமிழ் 7ல் 5வது போட்டியாளராக பாடகர் நிக்சன் பங்கேற்பு
முகேன் நடித்த ஒத்த தாமரை பாடல் ஆல்பத்தை பாடியவர் நிக்சன்
ராப் இசை பாடகரான நிக்சன் பிக் பாஸ் சீசன் 7ல் மாஸ் என்ட்ரி
ஐந்தாவது போட்டியாளராக ராப் பாடகர் நிக்சன் #biggbosstamil7 #BiggBossTamil #BBTamilSeason7 #பிக்பாஸ் #biggbosstamil #biggbosstamil7 #KamalHassan #nicson pic.twitter.com/0kIRpZoGu6 — ColomboTamil (@TheColomboTamil) October 1, 2023
07:35 pm
ரவீனா தாஹாவிடம் இருந்த கேப்டன் பதவி பிரதீப் ஆண்டனி வசம் சென்றது
கடைசி ஆள் வரை முதல் நாளே கேப்டன் ஆகிவிடுவார்கள் போல தெரிகிறது
ஆரம்பத்திலேயே சண்டையை ஆரம்பிக்க பிக் பாஸ் போடும் ஆட்டம் அட்டகாசம்
07:26 pm பிரதீப் ஆண்டனி நான்காவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்
பிரதீப் ஆண்டனி நான்காவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்#biggbosstamil7 #BiggBossTamil #BBTamilSeason7 #பிக்பாஸ் #biggbosstamil #biggbosstamil7 #KamalHassan #pradeepantony pic.twitter.com/yai99ZYtDu — ColomboTamil (@TheColomboTamil) October 1, 2023
07:21 pm
பூர்ணிமா ரவியிடம் இருந்து கேப்டன்ஸியை வந்த வேகத்தில் பெற்ற ரவீனா தாஹா
பிக் பாஸ் வீட்டின் அடுத்த கேப்டனாக மாறிவிட்டார் ரவீனா தாஹா
07:14 pm
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 மூன்றாவது போட்டியாளர் ரவீனா தாஹா
முதல் இரு போட்டியாளர்கள் எளிமையாக அறிமுகமாகினர்
ரவீனா தாஹா நடனம் ஆடியபடி அசத்தல் அறிமுகம் ஆகியுள்ளார்
சின்னத்திரை நடிகை ரவீனா தாஹா பிக் பாஸ் 7ல் பங்கேற்பு
மூன்றாவது போட்டியாளராக உள்ளே வந்த ரவீனா #biggbosstamil7 #BiggBossTamil #BBTamilSeason7 #பிக்பாஸ் #biggbosstamil #biggbosstamil7 #KamalHassan #raveenadada pic.twitter.com/QOwlT1NYl2 — ColomboTamil (@TheColomboTamil) October 1, 2023
07:07 pm
கேப்டன் பதவியில் பிக் பாஸ் வைத்த விளையாட்டு
ஒரே நொடியில் கேப்டன் பதவியை இழந்த கூல் சுரேஷ்
புதிய கேப்டனாக மாறிய பூர்ணிமா ரவி
அடுத்த ஆள் வந்தால் நிலைமை மாறிவிடும்
06:52 pm
இரண்டாவது போட்டியாளராக பூர்ணிமா ரவி உள்ளே வந்தார்
இரண்டாவது போட்டியாளராக பூர்ணிமா ரவி உள்ளே வந்தார் #biggbosstamil7 #BiggBossTamil #BBTamilSeason7 #பிக்பாஸ் #biggbosstamil #biggbosstamil7 #KamalHassan pic.twitter.com/Nm6orAdOms — ColomboTamil (@TheColomboTamil) October 1, 2023
06:42 pm
பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டன் கூல் சுரேஷ்
முதல் வாரத்தில் நாமினேஷனில் இருந்து தப்பித்த கூல் சுரேஷ்
06:34 pm
பிக் பாஸ் தமிழ் சீசன் 7: முதல் போட்டியாளர் கூல் சுரேஷ்
06:33 pm
சிம்பு, சந்தானத்திற்கு நன்றி சொன்ன கூல் சுரேஷ்
சிம்பு, சந்தானத்திற்கு நன்றி சொன்ன கூல் சுரேஷ்
கண் கலங்கியபடி கையெடுத்துக் கூப்பிட்டு நன்றி சொன்ன கூல் சுரேஷ்
06:28 pm
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 முதல் போட்டியாளர் கூல் சுரேஷ்
06:25 pm
பிக் பாஸ் வீட்டை கமல் வேற கெட்டப்பில் உள்ளே சென்ற காட்சிகள் வெளியானது
பிக் பாஸ் வீட்டை இன்னொரு கமல் சுற்றிப் பார்ப்பது போல காட்டியுள்ளனர்
இந்த முறை சிறையில் சங்கிலி எல்லாம் உள்ளது
இரண்டு வீடு ஆனால் ஒரு வாசல் மற்றும் ஒரு கிச்சன் தானாம்
வீட்டில் கலை வடிவம் இந்த முறை கண்களை கவரும் வகையில் உள்ளன
06:13 pm
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது!
06:12 pm
திருடர் கெட்டப்பில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கமல்ஹாசன்
அகம் டிவி வழியே டபுள் ஆக்ஷன் கமல்
06:07 pm
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது
நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என எம்ஜிஆர் பாடலுடன் தொடங்கியது
கமல்ஹாசன் படுக்கையில் இருந்து எழுந்து ரெடியாகும் காட்சிகள் ஒளிபரப்பு