Bigg Boss (Tamil season 7) - பிக் பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியை எதில் பார்க்கலாம்? 

பிக் பாஸ் தமிழ்: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ்  7-வது சீசன் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி ஒளிபரப்பாகிறது. 

Bigg Boss (Tamil season 7) - பிக் பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியை எதில் பார்க்கலாம்? 

பிக் பாஸ் தமிழ்: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ்  7-வது சீசன் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி ஒளிபரப்பாகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பான 6 சீசன்களுமே மிகப்பெரிய ஹிட்டும் ஆகியுள்ளது.

இந்நிலையில், மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக் பாஸ் 7-வது சீசன் நிகழ்ச்சி அக்டோபர் 1-முதல் தொடங்குகிறது. 

இந்த முறை யாரெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1-ஆம் தேதி இரவு 6 மணி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. முதல் நாள் என்பதால் மாலை 6 மணிக்கு ஆரம்பித்து கோலாகலமாக நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது.  இரவு 11 மணி வரை பிரமாண்டமாகவும் நடைபெறும் என கூறப்படுகிறது.

மற்ற நாட்களில் அதாவது அக்டோபர் 2-ஆம் தேதியிலிருந்து இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். 

விஜய் தொலைக்காட்சியில் பார்க்க முடியவில்லை என்றால் நீங்கள் டிஸ்னி  + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

எப்போதும் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 6-வது  சீசனிலிருந்து ஹாட்ஸ்டாரில் மட்டும் 24 மணி நேரம் பார்க்கும் வசதியை கொண்டுவந்தார்கள். 

இதன் மூலம் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை பார்க்கலாம். அதைப்போலவே இந்த முறை அதாவது 7-வது சீசனிலும் அதே வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. 

எனவே, ஹாட்ஸ்டார் மூலம் 24 மணி நேரமும் நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கலாம்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp