6 பேருக்கு முதல் நாளே தண்டனை கொடுத்த பிக்பாஸ்.. பெட்டி படுக்கையுடன் வெளியேறிய போட்டியாளர்கள்!

Bigg Boss Tamil 7: பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் முதல் கட்டமாக கலந்து கொண்டனர். 

6 பேருக்கு முதல் நாளே தண்டனை கொடுத்த பிக்பாஸ்.. பெட்டி படுக்கையுடன் வெளியேறிய போட்டியாளர்கள்!

Bigg Boss Tamil 7

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் முதல் கட்டமாக கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் இந்த வார கேப்டன் பதவிக்கான வாய்ப்பை பிக் பாஸ் அழைத்தார்.

ஏற்கனவே கேப்டன் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவரை கன்வின்ஸ் செய்து அந்த பதவியை புதிதாக வந்தவர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட முதல் டாஸ்க்.

ஆனால் ஒரு சிலர் கேப்டன் பதவியை பெற்றுக் கொள்ள முயற்சிக்காமல், விட்டுக் கொடுத்த நிகழ்ச்சியும் நேற்று நடந்தது. 

இந்த நிலையில் கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக விஜய் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பின் வந்த 6 போட்டியாளர்கள் கேப்டன் பதவியை அவரிடம் இருந்து பெறாமல் விட்டு கொடுத்தனர்.

அவ்வாறு விட்டுக்கொடுத்த ஐ{, நிக்சன், அனன்யா, பவா செல்லத்துரை, வினுஷா மற்றும் ரவீனா ஆகிய 6 பேரும் பிக்பாஸ் பெரிய வீட்டில் இருந்து வெளியேறி சின்ன வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்றும் அந்த சின்ன வீட்டில் இருந்து நான் சொல்லும் வரை போட்டியாளர்கள் வெளியேறக்கூடாது என்றும் பிக்பாஸ் நிபந்தனை விதித்துள்ளார்.

இதனை அடுத்து பெட்டி படுக்கையுடன் சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு 6 பேரும் கிளம்பினர். முதல் நாளே பிக்பாஸ் ட்விஸ்ட் வைத்துள்ளதை அடுத்து இன்றே விறுவிறுப்பு ஆரம்பமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp