பெண் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. குஷியில் ஆண் போட்டியாளர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நான்காவது நாளில் போட்டியாளர்களுக்கு முதல் டாஸ்க் குறித்த அறிவிப்பை பிக் பாஸ் தெரிவித்துள்ளார். 

பெண் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. குஷியில் ஆண் போட்டியாளர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நான்காவது நாளில் போட்டியாளர்களுக்கு முதல் டாஸ்க் குறித்த அறிவிப்பை பிக் பாஸ் தெரிவித்துள்ளார். 

இந்த டாஸ்க்கில் தோற்றுவிட்டால் மேக்கப் பொருட்கள் அனைத்தும் எடுத்துச் செல்லப்படும் என்று பிக் பாஸ் அறிவித்துள்ளதால் பெண் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ஆனால் அதே நேரத்தில் போட்டியாளர்கள் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

வெளியான புரமோ வீடியோவில் ’இது உங்களுக்கான முதல் ஷாப்பிங் டாஸ்க், இந்த டாஸ்க் பெயர் வெயிட் பார்ட்டி. இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்து விட்டால் மேக்கப் பொருட்கள் அனைத்தும் உங்களிடம் இருந்து எடுத்துச் செல்லப்படும் என்று பிக்பாஸ் அறிவிக்கிறார்.

போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வீட்டில் இருந்து ஒரு பொருளை எடுத்து வந்து எடை மேடையில் நிற்க வேண்டும். எடை மேடை மிக சரியாக 340 கிலோ காண்பிக்க வேண்டும். 

அதைவிட அதிகமாகவோ குறைவாகவோ காண்பித்தால் அந்த குழு தோல்வி அடைந்ததாக கருதப்படும். அவ்வாறு தோல்வி அடைந்தால் அந்த குழுவில் உள்ளவர்களின் மேக்கப் பொருட்கள் அனைத்தும் பிக் பாஸ் எடுத்துச் சென்று விடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து எடை மேடையில் இருக்கின்றனர். ஆனால் 340 கிலோ சரியாக வராமல் கூடுதலாகவும் குறைவாகவும் வந்து கொண்டிருக்கும் நிலையில் முடிவு என்ன என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp