3ஆவது டெஸ்டில் பும்ரா விளையாடுவது சந்தேகம் தான்! வெளியான விவரம் இதோ!

வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பயிற்சியில் ஈடுபடவில்லை. பணிச்சுமையை கருத்தில் கொண்டு பும்ராவிற்கு பயிற்சியாளர்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

3ஆவது டெஸ்டில் பும்ரா விளையாடுவது சந்தேகம் தான்! வெளியான விவரம் இதோ!

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வலை பயிற்சியில் பும்ரா ஈடுபடவில்லை.

ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. இதனால் பிரிஸ்பேனில் நடைபெறும் 3வது டெஸ்ட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்காக இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பயிற்சியில் ஈடுபடவில்லை.

பணிச்சுமையை கருத்தில் கொண்டு பும்ராவிற்கு பயிற்சியாளர்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 14 ஆம் தேதி கப்பாவில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி பிரிஸ்பேனுக்கு செல்ல தயாராக உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஷுப்மான் கில்,யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் 3வது டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க்-பால் டெஸ்டில், இந்திய அணி 2 இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 81 ஓவர்கள் மட்டுமே பேட் செய்தது. மேலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp